அதெல்லாம் இருக்கட்டும்.. இதுதான் அடுத்து நடக்க போகுது.. எடப்பாடிக்கு பெரிய நம்பிக்கை.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கணிப்புகள் எல்லாம் அதிமுகவிற்கு எதிராக வந்துள்ளன.
லோக்சபா தேர்தல் தொடர்பான எக்சிட் போல் கணிப்புகள் நேற்று முதல்நாள் வெளியானது . தேசிய அளவில் கணிப்புகள் பல மாறி மாறி வந்துள்ளன. சில கணிப்புகளில் பாஜக, என்டிஏ தோல்வி அடையும். இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறி உள்ளன.

பெரும்பாலான கணிப்புகள் இந்திய கூட்டணி தோல்வி அடையும், காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றே தெரிவித்து உள்ளன. ஆனால் எல்லா கணிப்புகளும் ஒரே மாதிரி சொல்லும் விஷயம் என்றால் அது அதிமுகவின் தோல்வி. தமிழ்நாட்டில் கண்டிப்பாக அதிமுக தோல்வி அடையும் என்றே எல்லா கணிப்புகளும் ஒரே போல் சொல்கின்றன.
கணிப்புகள்: நேற்று முதல்நாள் தமிழ்நாடு தொடர்பாக பல்வேறு லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலானவை திமுகவின் வெற்றியை உறுதி செய்துள்ளன.
1 இந்தியா டுடே: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
2 தந்தி டிவி கணிப்பு: தமிழகத்தில் 33 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு அடுத்தப்படியாக பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
3 டைம்ஸ் நவ்: திமுக 34-35 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2-3 இடங்களில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
4 நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு: அதிமுக கூட்டணி 0 ± 2 இடங்களை வெல்லும். திமுக கூட்டணி 29 ± 5 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 10 ± 4 இடங்களை வெல்லும் என்று நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு தெரிவித்துள்ளது.
5. டிபி லைவ் நியூஸ்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 37-39 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல் அதிமுக 0-1 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி 0-1 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
எடப்பாடி நம்பிக்கை: இப்படி தமிழ்நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கணிப்புகள் எல்லாம் அதிமுகவிற்கு எதிராக வந்துள்ளன. ஆனால் எடப்பாடி பழனிசாமி மட்டும் இதை எல்லாம் நம்பாமல் பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.
குறைந்தது 10 இடங்களில் வெல்வோம். எல்லாம் நமக்கு சாதகமாக வரும் என்று எடப்பாடி நம்புகிறாராம். எடப்பாடி ஊரை சேர்ந்த ஒரு பெண் ஜோசியர் அவருக்கு சொன்ன ஜோசியம்தான் இதற்கு காரணமாம். அவர்தான் அதிமுக 10 இடங்களில் வெல்லும் என்று நம்பருடன் கூறி இருக்கிறாராம். இடங்களையும் அவர் கூறியதாக தெரிகிறது.
அவரிடம் நீண்ட காலமாக எடப்பாடி பல கணிப்புகளை பெற்று வருகிறாராம். இதன் காரணமாகவே கண்டிப்பாக நமக்கு சாதகமாக வரும் என்று எடப்பாடி கொஞ்சம் நம்பிக்கையாக இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications