ஒரு வீடியோ.. ஒரு போட்டோ.. ஆளுநர் ரவி செயலால் உருவான சட்ட சிக்கல்.. ஸ்டாலின் எடுக்கும் பிரம்மாஸ்திரம்
சென்னை: நேற்று சட்டசபை கூட்டத்திற்கு ஆளுநர் ரவி செய்த இரண்டு விஷயங்கள் காரணமாக மிகப்பெரிய சட்ட சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
நேற்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.

சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். இதன் காரணமாகவே உரையை பாதியில் நிறைவு செய்ததாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தார் .
தமிழ்நாடு அரசின் நீண்ட கால் மரபை.. அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் மறைப்பை ஆளுநர் ஆர். என் ரவி மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வருகின்றன. இதுவே நேற்று சட்டசபையில் இந்த களேபரங்கள் நடக்க காரணம் ஆகும்.
அப்பாவு பதிலடி: தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்ற ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு வைத்துள்ளார். அதில், ஆளுநர் குறைவாக வாசித்ததை குறையாக சொல்லவில்லை, உங்கள் மனதில் உள்ளதை சொன்னீர்கள். எங்கள் மனதில் உள்ளதை நாங்களும் சொல்கிறோம்.
இந்த அவையில் அவரவர் தங்களுக்கு விருப்பமானதை, மனதில் தோன்றியதை எல்லாம் பேச முடியாது. 1 பைசாவையும் மத்திய அரசு தரவில்லை. சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை.
ஆளுநர் ரவியிடம் முழு உறையும் முன்பே கொடுக்கப்பட்டது. அவரின் ஒப்புதல் பெற்றுத்தான் உரை அவைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை அவர் முழுமையாக படிக்கவில்லை. இங்கே ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆளுநரை மாண்புடன் நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினும் உத்தரவிட்டு இருக்கிறார். இதையடுத்து ஆளுநர் உரையை நான் வாசித்தேன். சட்டசபையில் தேசிய கீதம் ஆளுநர் உரைக்கு பின் பாடப்படும் என்பதே மரபு. அதை மாற்றும்படி ஆளுநர் ரவி கூறினார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர். என் ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அப்பாவு வாசித்தார்; இதையடுத்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்
மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021- 22ல் 4ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022 -23ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது., தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது;
தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது; கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது., என்று கூறியுள்ளார் .
சட்ட சிக்கல்; இந்த நிலையில்தான் ஆளுநர் நேற்று ஆற்றிய பாதி உரை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார். அதற்கு பதிலாக அரசு தயாரித்த உரை அவை குறிப்பில் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி நேற்று தான் அவையில் ஆற்றிய உரையின் வீடியோவை இணையத்தில் வெளியிட்டார் subtitle உடன் அவர் வெளியிட்டார். அதேபோல் அவையில் பேசியதன் வார்த்தைகளை அப்படியே அறிக்கையாக வெளியிட்டார்.
அவரின் இந்த செயல் பெரிய சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பேச்சை பொதுவில் யாரும் வெளியிட கூடாது. அப்படி வெளியிட்டால் அது சட்ட விதி மீறல். ஆனால் நீக்கப்பட்ட பேச்சை சமூக வலைத்தளங்களில் மறுபதிப்பு செய்திருக்கார் ஆளுநர் ரவி. இது சட்டமன்ற உரிமை மீறல்.
இந்த நிலையில்தான் ஆளும் திமுக தரப்பு, பெரும்பாலும் முதல்வர் ஸ்டாலின் அல்லது அவை முன்னவர் துரைமுருகன் இதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications