ஆஹா.. இரவோடு இரவாக.. சேகர் பாபு அங்கேயே போய் பார்த்துட்டாரே! நொறுங்கிய மோதல்! திரும்பி பார்த்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தமிழ்நாடு அமைச்சரவை இலாக்கா மாற்றப்பட்டபின் அமைச்சர் சேகர் பாபு இரவோடு இரவாக நடத்திய மீட்டிங் ஒன்று அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பு திமுக வட்டாரத்தினரையும் கூட திரும்பி பார்க்க வைத்துள்ளது.

திமுகவில் மிக முக்கியமான அமைச்சராக சேகர் பாபு உருவெடுத்து இருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையை இவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். இந்த நிலையில் இன்னொரு பக்கம் சிஎம்டிஏ இலாக்காவும் சேகர் பாபுவிற்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

நேற்று அமைச்சரவை இலாக்கா மாற்றத்தின் போது இந்த துறை அவருக்கு வழங்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்தான் சிஎம்டிஏ.

 முக்கியமான துறை

முக்கியமான துறை

சென்னையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் இந்த துறைக்கு கீழ்தான் வருகிறது. சென்னையில் கொண்டு வரப்படும் புதிய ப்ராஜக்ட்டுகள், ஒப்பந்தங்கள் அனைத்திலும் இந்த துறைதான் முடிவு எடுக்கிறது. சென்னை பெருநகரத்திற்கு என்று தனியாக இருக்கும் துறையாகும். இதற்குத்தான் சேகர் பாபு அமைச்சராகி உள்ளார். சென்னை மேயராக ஏற்கனவே சேகர் பாபுவிற்கு நெருக்கமான பிரியா இருக்கிறார். வட சென்னையின் திரு.வி.க. நகர் தொகுதிக்குள் அடங்கிய 74-வது வார்டில் இருந்து ப்ரியா கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு இவர் நெருக்கம் ஆனவர்.

 பிரியா ஆர்

பிரியா ஆர்

அவர் மாவட்ட செயலராக உள்ள சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து இவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த பதவியை பெற பலரிடையே போட்டி நிலவியது. முக்கியமாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆதவாளர்கள் இடையே போட்டி நிலவியது. இந்த மேயர் ரேஸில் கிளியர் வின்னர் என்னவோ அமைச்சர் சேகர் பாபுதான். சென்னையில் அமைச்சர் சேகர் பாபு மீது முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் விதமாக மேயராக பிரியா தேர்வானார். இந்த நிலையில்தான் கூடுதல் குட் நியூஸாக தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய அமைச்சகராகி உள்ளார் சேகர் பாபு. இதன் மூலம் சென்னையில் இரண்டு முக்கிய பதவிகளை சேகர் பாபு தரப்பு கைப்பற்றி உள்ளது.

 திமுக கோட்டை

திமுக கோட்டை

சென்னை திமுகவில் சேகர் பாபு வெளிப்படையாக கோலோச்சும் நிலை ஏற்பட்டு உள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுகவின் முகமாக செந்தில் பாலாஜி ஆனது போல சென்னையில் சேகர் பாபு நபராக இதன்மூலம் உருவெடுத்து உள்ளது. தன்னிடம் சென்னை பெருநகர துறை.. தனது ஆதரவாளர்களுக்கு மேயர் பதவி என்று சேகர் பாபு தொட்டதெல்லாம் வெற்றியாக மாறிக்கொண்டு இருக்கிறது. மேயர் பிரியாவிற்கு இனி சென்னை தொடர்பான திட்டங்கள் பற்றி அமைச்சரிடம் பேசவும், முடிவுகளை எடுக்கவும் வசதியாக இருக்கும். முதல்வர் ஸ்டாலினும் இதை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மோதல்

மோதல்

அமைச்சர் மா. சுப்பிரமணியம் - சேகர் பாபு இடையே போட்டி நிலவி வரும் நிலையில்தான்.. சேகர் பாபுவிற்கு இந்த பொறுப்பு கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் சேகர் பாபு மிக முக்கியமான தலைவராக உருவெடுத்து உள்ளார். இதனால் அமைச்சர் மா. சு அப்செட்டில் இருப்பதாக செய்திகள் வந்தன. அதாவது இரண்டு முக்கிய பதவிகளையும் தனது போட்டியாளர் சேகர் பாபு கைப்பற்றியதால் சேகர் பாபு அப்செட்டில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று சேகர் பாபு இரவோடு இரவாக சென்று அமைச்சர் மா. சுவை சந்தித்தார். மா. சு வீட்டிற்கே சென்று சேகர் பாபு வாழ்த்து பெற்றார். மா. சு கைலியில் வீட்டில் கேஷுவலாக இருந்த போது சேகர் பாபு அவரின் வீட்டிற்கு சென்று, தனக்கு கிடைத்த புதிய பொறுப்பிற்கு வாழ்த்து பெற்றார். சென்னை அரசியல் தொடர்பாக இவர்கள் இருவரும் சில நிமிடங்கள் ஆலோசனை செய்து நட்பாக பேசினார்கள். இவர்கள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக வந்த செய்திகளுக்கு இடையே இப்படி ஒரு மீட்டிங் நடந்து இருப்பது திமுகவினரையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+