கவனிச்சீங்களா.. பாஜக போடும் கணக்கு.. திமுக ஆட்சி மாறினால், "தமிழ்நாடு தினம்" மாறும்.. வானதி அதிரடி
வானதி சீனிவாசன் தமிழ்நாடு தினம் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்
சென்னை: திமுக அரசின் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தால் மக்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று வானதி சீனிவாசன் கருத்து கூறியுள்ளார்.. திமுகவின் அறிவிப்பை ஏற்காத, பாஜக இந்த விஷயத்திலும், தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாடு தினம் ஜூலை 18 அன்று இனி கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்..
தமிழ்நாடு என்ற பெயரை சூட்ட ஜூலை 18 அன்று கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளையே அத்தினமாகக் கொண்டாடுவது சரியாக இருக்கும் என்றும் ஸ்டாலின் அதற்கு ஒரு விளக்கமும் அளித்திருந்தார்.

வானதி கேள்வி
அதன்படி, கடந்த ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு தினம் தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.. இதில் முதல்வரும் பங்கேற்றிந்தார்.. இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்... அதில், "கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு உருவான தினம் நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகிறது. இதனால், தமிழக மக்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு தினம்
1967 ஜூலை 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு என பெயர் மாற்றத் தீர்மானம், 1968 நவம்பர் 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1969 ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாளில்தான் தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1956 நவம்பர் 1-ஆம் தேதி உருவான சென்னை மாகாணம்தான் இன்றைய தமிழ்நாடு. அதே நாளில்தான் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் தனி மாநிலங்களாகப் பிரிந்தது.

வானதி
அதனால்தான், இந்த மாநிலங்கள் நவம்பர் 1-ஆம் தேதியை தங்களது மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. குழந்தை பிறந்த தினத்தைத்தான், பிறந்த நாளாக கொண்டாடுகிறோம். குழந்தைக்குப் பெயர் வைத்த நாளை உலகில் யாரும் கொண்டாடுவதில்லை. தமிழ்நாடு தினத்தை திமுக அரசு மாற்றினால், ஆட்சி மாறும்போது மீண்டும் மாறும். அதனால் தேவையற்ற குழப்பம்தான் மிஞ்சும். இந்திய நாட்டின் பிரிக்க முடியாத அங்கமான தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க நவம்பர் 1 தமிழ்நாடு தினம், ஜூலை 18 தமிழ்நாடு தீர்மான நாள் என இரு நாட்களிலும் உறுதியேற்போம்" என்று வானதி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1-ம் தேதியை மாநில நாளாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கொண்டாடுகின்றன... அப்படித்தான், கடந்த அதிமுக ஆட்சியிலும் நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2020-ல் அறிவித்தார்.. அதேபோல, அடுத்த ஆண்டே, நவம்பர் 1ம் தேதி தமிழக தினம் கொண்டாடப்பட்டது.

எடப்பாடி அறிவிப்பு
இது ஒருவருடம்தான் கொண்டப்பட்டது.. அதற்கு பிறகு திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டது.. ஆனால், தமிழ்நாடு தினத்தை திமுக தவிர பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை.. கடந்த நவம்பர் 1ம் தேதி, "மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த தினமான இன்றுதான் தமிழ்நாடு நாள்" என்று சொல்லி எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை சொல்லியிருந்தாரே தவிர, இந்த தமிழ்நாடு தினத்தை அதிமுக கண்டுகொள்ளவில்லை..

மிஸ்ஸிங்
அதேபோல, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1-ம் தேதியை மாநில நாளாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கொண்டாடிய நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார்.. ஆனால், அதில், தமிழ்நாட்டின் பெயர் இடம் பெறவில்லை.. அந்த வாழ்த்தில், புதிய மாநில நிறுவன தினத்தை கொண்டாடி வரும் ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த மாநில மக்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.

தமிழ்நாடு தினம்
இப்போது என்றில்லை, எப்போதுமே, இது தொடர்பாக பிரதமர், குடியரசு தலைவர் தங்கள் வாழ்த்துக்களை தமிழகத்துக்கு சொல்வதில்லை... காணம், தமிழ்நாட்டிலிருந்துதான் பல மாநிலங்கள் பிறந்தன என்பதால், தமிழ்நாடு புதிய மாநிலமாக கருதப்படுவதில்லை என்பதே இதன் கணக்காக உள்ளது.. அந்த வகையில், இனி வரும் காலங்களிலும், தமிழ்நாடு தினம், வெறும் அரசு தினமாகவே முடிந்து விடுமா, அல்லது ஒட்டுமொத்த மாநிலமும் சேர்ந்து கொண்டாடப்படும் தினமாக மாறுமா? தெரியவில்லை..!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications