"300 ஏக்கர்".. சாகுற வரை கலைஞர்தான்! அரசியல் பக்கமே எட்டி பார்க்க மாட்டேன்! நெப்போலியன் சொன்ன சீக்ரெட்
சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கும் நடிகர், முன்னாள் எம்பி நெப்போலியன் தமிழ்நாடு பக்கமே பொதுவாக வருவது இல்லை. அரசியல் பக்கமே எட்டி பார்க்காமல் ஒதுங்கி இருக்கும் நெப்போலியன் அமெரிக்காவிலேயே தங்கி இருப்பது ஏன் என்று மௌனம் கலைத்து உள்ளார்.
நடிகர் நெப்போலியன் திமுகவில் தீவிர உறுப்பினராக இருந்து எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் இருந்துள்ளார். 2009 தேர்தல் வெற்றிக்கு பின் எம்பியான இவர் மத்திய அமைச்சரவையில் சமூக நீதித்துறை இணை அமைச்சராக இருந்தார்.
இந்த நிலையில் அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் அவருடன் நெருக்கமாக இருந்ததாக கருதப்பட்ட நெப்போலியனும் அப்படியே ஓரம்கட்டப்பட்டார். திமுகவில் ஓரம்கட்டப்பட்ட இவர், 2014ல் பாஜகவில் இணைந்தார். அப்போதைய தலைவர் அமித் ஷா முன்பு இவர் பாஜகவில் இணைந்தார்.
2015ல் பாஜக சார்பாக மாநில துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தீவிர அரசியலில் இருந்து அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார்.

நெப்போலியன்
அமெரிக்காவிற்கு சென்றவர் அதன்பின் பெரிதாக தமிழ்நாடு பக்கமே வரவில்லை. கிட்டத்தட்ட கடந்த 7 வருடங்களாக அவர் அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பின் பேசிய அவர், எனக்கு சினிமா வாய்ப்பு அடிக்கடி வருகிறது. வருடத்திற்கு 10 படங்களில் நடிக்க கேட்கிறார்கள். அதற்கு நேரம் இல்லை. அதனால் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறேன். மற்றபடி இந்தியா வருவது இல்லை.

விவசாயம்
எனக்கு விவசாயம் மீதுதான் ஆர்வம், நான் பிறந்து வளர்ந்தது விவசாய குடும்பம். தற்போது அமெரிக்காவில் விவசாயம் செய்கிறேன். இதற்காக 300 ஏக்கர்ல நிலம் வாங்கினேன்.இதில் புற்கள் விவசாயம் செய்கிறோம். இதை விளைய வைத்து விற்பனை செய்கிறோம். எல்லாம் மிஷின் மூலம் வெட்டி அதை விற்பனை செய்கிறோம். தமிழ்நாட்டில் எப்படி அரிசி விற்பனைக்கு விளையவிக்கப்படுகிறதோ அப்படித்தான் இங்கே புற்களை விளைய வைத்துக்கொண்டு இருக்கிறோம்.

அரசியல்
12 வருடமாக அமெரிக்காவில்தான் இருக்கிறேன். விவசாயம் செய்யவே எனக்கு விருப்பமாக உள்ளது. இங்கே தோட்டம் போட்டு இருக்கிறோம். அதில் விளையும் காய் கறிகளைத்தான் சாப்பிடுகிறோம். இயற்கையான உணவுகளை சாப்பிடுகிறோம். தோட்டத்தை பார்த்துக்கொள்வது, குடும்பத்தோடு இருப்பது என்று சந்தோசமாக இருக்கிறேன். எனக்கு அரசியலில் மேலும் விருப்பம் இல்லை. நான் இப்போது அரசியலிலேயே இல்லை.

நெப்போலியன் பேட்டி
7 வருடமாக அரசியலில் இல்லை. நான் இனி அரசியல் பக்கமே எட்டி பார்க்க மாட்டேன். எனக்கு எப்போதும் அரசியல் குரு கலைஞர்தான். மற்றபடி அரசியலில் எட்டிப்பார்க்கும் எண்ணம் இல்லை. நான் எம்பியாக, எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்துவிட்டேன். அவ்வளவுதான். என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. குழந்தையை பார்த்துக்கொள்ள, சிகிச்சை அளிக்க இங்கே வந்துள்ளேன். அதனால் அரசியலில் இனி இருக்க மாட்டேன், என்று நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications