"செவ்வந்தி".. எடப்பாடியை விடாத ஓபிஎஸ் டீம்.. உடனே வெளியே அனுப்புங்க! இறையன்புவிற்கு பறந்த புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அலுவலகம் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு வேறு விதமாக செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்புவிடமும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு புகார் அளித்துள்ளது.

Recommended Video

    தடை கற்கள் அத்தனையும் உடைத்துவிட்டோம் - Edappadi Palaniswami *Politics

    அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பொதுக்குழு நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு ஓ பன்னீர்செல்வம் சென்றார். பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கையகப்படுத்தினார்.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    இதனால் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகளுக்கும், எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளுக்கும் இடையில் மோதல் வந்தது. இந்த மோதல் அன்று கலவரமாக வெடித்தது. இதை தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. வருவாய் துறை மூலம் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனி தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

     சீல்

    சீல்

    இது தொடர்பாக போலீசிடம் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ரிப்போர்ட் கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அதிமுக அலுவலகம் செல்ல முடியாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பு திணறி வருகிறது. எடப்பாடி பொதுச்செயலாளர் ஆன பின் ஒரு முறை அதிமுக அலுவலகம் செல்ல முடியவில்லை. அதோடு அவர் கட்சியில் பல புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். ஆனால் அந்த நியமனத்தை கூட அதிமுக அலுவலகத்தில் இருந்து செய்ய முடியவில்லை.

    வழக்கு

    வழக்கு

    தனது கிரீன்வேஸ் இல்லத்தைதான் எடப்பாடி பழனிசாமி இதற்காக பயன்படுத்தி வருகிறார். அங்கு இருக்கும் செவ்வந்தி இல்லம் - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசித்த இல்லம் ஆகும். தேர்தலில் தோல்வி அடைந்த பின் இந்த இல்லத்தில் இருந்து அவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளும் திமுக அரசு எடப்பாடியை அதே இல்லத்தில் தொடர அனுமதித்தது.

    செவ்வந்தி

    செவ்வந்தி

    இந்த நிலையில்தான் ஜூலை 17ம் தேதி இங்கு எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த எடப்பாடி அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக அலுவலகம் மூடப்பட்ட நிலையில் வேறு இடம் இல்லாததால் தனது வீட்டிலேயே எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த அழைத்துள்ளார். ஆனால் இதற்கு சட்டப்படி அனுமதி கிடையாது. தமிழ்நாடு சம்பளம் வழங்கும் சட்டம், 1951ன் கீழ் இந்த கட்டிடம் செயல்பட்டு வருகிறது. அதனால் இங்கு கட்சி சார்ந்த கூட்டம் நடத்த கூடாது.

    இறையன்பு

    இறையன்பு

    ஆளும் கட்சி என்றால், அரசு சார்ந்த நிகழ்வாக நடத்தலாம். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் போது இப்படி கூட்டம் நடத்த முடியாது. இதை காரணம் காட்டி எடப்பாடி பழனிசாமியை அந்த வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு புகார் அளித்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோவை செல்வராஜ் சார்பாக தலைமை செயலாளர் இறையன்புவிடம் இதற்காக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    வழக்கு

    வழக்கு

    செவ்வந்தி வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமியை வெளியேற்ற வேண்டும். அவர் விதி மீறிவிட்டார் என்று கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓ பன்னீர்செல்வம் முதல்வராக இருந்து பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன போது செவ்வந்தி வீட்டை காலி செய்யும்படி எடப்பாடி அரசு ஓபிஎஸ்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில்தான் அதே வீட்டை காலி செய்யும்படி ஓபிஎஸ் தரப்பு எடப்பாடிக்கு செக் வைத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+