வில்லு விட்ட பிரியங்கா.. வியந்த வயநாட்டு பழங்குடி மக்கள்.. டேஞ்சர் காட்டில் கயிற்றை பிடித்து.. சபாஷ்
சென்னை: கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினரான பிரியங்கா காந்தி, அந்த தொகுதியில் ஆய்வுப் பணிகளை அங்கேயே தங்கியிருந்து மேற்கொண்டார்.. அப்போது பழங்குடி மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார் பிரியங்கா.. பிரியங்காவின் இந்த வருகையும், செயல்பாடுகளும், கேரள மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் கடந்த ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி தன்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

வயநாடு தொகுதி
இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அப்போது 6,22,338 வாக்குகளை பெற்று அதாவது 4 லட்சத்துக்கு அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினரான பிரியங்கா காந்தி, அந்த தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக நிலம்பூர் வனப்பகுதியில் வாழும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

கருளை காடு பழங்குடி மக்கள்
கொட்டியம்வயல் வனப்பகுதிக்குள் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா - பூழித்தோடு சாலை திட்டத்தை மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அலுவலருடன் இணைந்து பிரியங்கா பார்வையிட்டார். நிலம்பூர் அருகிலுள்ள கருளை காடு வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களையும் நேரில் சந்தித்து, அவர்களின் குறைகள், பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
பிரியங்காவின் இந்த வயநாடு வருகையும், நேரடி ஆய்வுகளும் கேரள மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. நிலம்பூர் அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடி மக்களை சந்திக்க சென்றபோது, கிட்டத்தட்ட 2 கிமீ. கரடு முரடான பாதையில் நடந்தே சென்றார்.. செங்குத்தான பாறைகள், தொங்குப்பாலங்களை, கயிற்றினையும், அருகிலிருந்தவர்களின் கைகளை பிடித்தும், மெல்ல கடந்து வந்தார்..
வில் அம்பு - வேட்டையாடும் கருவிகள்
அதேபோல நேற்று முன்தினம் மானந்தவாடி அரண்மனை பார்வையிட்டார் பிரியங்கா காந்தி.. மானந்தவாடியில் பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியை சேர்ந்த செறுவயல் ராமனின் வீட்டுக்கு சென்றார் பிரியங்கா.. அங்குள்ள விவசாயிகளிடம் நெற்பயிர், விவசாயம் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய வேட்டைக் கருவிகள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டார்.. அதில் வேட்டையாட பயன்படும் வில்-அம்பு குறித்து கேட்டு, அவைகளை பயன்படுத்தியும் பார்த்தார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications