சண்டை போட்டால் சிக்கல்.. எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் செங்கோட்டையன்.. என்ன நடக்குது?
சென்னை: செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன் என்று செங்கோட்டையன் பேசி இருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பின்த் பேச்சுக்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்ற அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இருமுறை சந்தித்தார். அப்போதே அவர் பாஜகவில் இணையவுள்ளார் என்ற பேச்சுக்கு வழிவகுத்தது. இடையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்றும் பேச்சுக்கள் வந்தன.

செங்கோட்டையன் அதிர்ச்சி
இந்த நிலையில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன். என்ன பேசப் போகிறேன் என்பதை அறியப் பொறுத்திருங்கள்" என்று கூறி உள்ளார். அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த பரபரப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ளார். பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜகவை சீண்டும் விதமாக பெரியார் புகைப்படத்தை செங்கோட்டையன் பயன்படுத்தி உள்ளதால், அவர் திமுக அல்லது தவெக பக்கம் செல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கோட்டையன் பேச்சுக்கு என்ன காரணம்?
அவரின் பின்த் பேச்சுக்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தில், அதிமுகவில் தான் ஓரம்கட்டப்படுகிறோம் என்று செங்கோட்டையன் நினைக்கிறார். கட்சியில் மூத்தவராக இருக்கும் நமக்கு மதிப்பு இல்லை என்று எடப்பாடி நினைக்கிறார். செங்கோட்டையனின் செயலை பார்க்கும் போது அவர் சண்டைக்கு தயாராக இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் செங்கோட்டையன் எடப்பாடிக்கு சமமானவர்.
ஆனால் இரண்டு தரப்பும் இன்னும் நேரடியாக மோதவில்லை. கட்சி இப்போதே பலவீனமாக
உள்ளது என்பதால் எடப்பாடி நேரடியாக மோத ரெடியாக இல்லை. அப்படி மோதினால் சிக்கல் ஏற்படும் என்று எடப்பாடி நினைக்கிறார். தேர்தலுக்கு சிக்கலாகும் என்று எடப்பாடி நினைக்கிறார். எடப்பாடி யாரையும் கேட்காமல் முடிவு செய்கிறார். அவர் தோல்வியை தழுவுகிறார் என்பதே சிக்கல்.
செங்கோட்டையன் கோபம்
கட்சி பலமாக இருக்க வேண்டும் என்றே செங்கோட்டையனும் நினைக்கிறார்.
அவருக்கும் வயதாகிவிட்டது என்பதால்.. அவரும் பெரிதாக கலகம் செய்ய மாட்டார். இப்போது சண்டை போட்டால் சிக்கல் என்பதால்.. கொஞ்ச நாளுக்கு அமைதியாக செல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். ஆனால் இவர்கள் எல்லாம் இல்லாமல் கட்சி பலமின்றி உள்ளது. இதைத்தான் செங்கோட்டையன் மறைமுகமாக சொல்லி உள்ளார்.
கட்சியில் மற்றவர்களுக்கு மதிப்பு இல்லை.. ஜெயலலிதா, எம்ஜிஆருக்கே மதிப்பு இல்லை என்பதை செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். வரப்போகிற தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்வா சாவா தேர்தல் என்றுதான் நான் பார்க்கிறேன். இப்போது செங்கோட்டையனை எடப்பாடி சமாளித்தாலும் எதிர்காலத்தில் சமாளிக்கவே முடியாத நிலை ஏற்படும், என்று நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications