ஓ இதுதான் காரணமா? இலவச பெண்கள் பஸ்ஸில் முன்னாடி மட்டும் பிங்க் அடித்தது ஏன்? அரசின் மாஸ்டர் பிளான்!
சென்னை: சமீபத்தில் பெண்களுக்கான இலவச பேருந்துகளில் முன் பக்கம் மட்டும் பிங்க் வண்ணம் அடிக்கப்பட்டது பெரிய அளவில் வைரலானது. இதற்கு பின் வேறு பல காரணங்கள் இருப்பதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
தமிழ்நாட்டில் மாநகர, நகர பேருந்துகளில் பெண்களுக்கும் இலவச பயணம் என்ற திட்டம் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் "ஸ்டாலின் பஸ்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்டாலின் பஸ் பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நகர, மாநகர பேருந்துகளில் பெண்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டியது இல்லை.
மாறாக வெறுமனே காசு இன்றி டிக்கெட் மட்டும் வாங்கி பயணம் செய்ய முடியும்.

வரவேற்பு
வெள்ளை போர்ட் பேருந்துகள், நகர பேருந்துகளில் மட்டுமே இந்த அமலில் உள்ளது. நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள், டீலக்ஸ் பேருந்துகளில் எல்லாம் இந்த திட்டம்ன் அமலில் இல்லை. இந்த நிலையில் பெண்கள் இடையே இந்த பேருந்துகளை கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகளிருக்கான இலவச பேருந்து என்ற போர்ட் இருந்தால் அவசரத்தில் பெண்களால் இது போன்ற இலவச பேருந்துகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குழப்பம்
இந்த நிலையில்தான் சமீபத்தில் இந்த இலவச பேருந்துகளில் பிங்க் வண்ணம் பூசப்பட்டது. மகளிர் இலவச பயணம் செய்யும் சாதாரண கட்டண பேருந்துகளை எளிதில் தெரிந்துகொள்ள ஏதுவாக 50 பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் சேகர் பாபு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆனால் இந்த நிகழ்வு வேறு ஒரு விஷயத்திற்காக கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது.

கிண்டல்
அதன்படி பேருந்துகளின் முன் பக்கம் மட்டும் பிங்க் வண்ணம் பூசப்பட்டதை பலரும் கிண்டல் செய்தனர். என்ன இது.. போக்குவரத்துக்கு துறையிடம் காசு இல்லையா? முன் பக்கம் மட்டும் பிங்க் வண்ணம் பூசி இருக்கிறார்களே? பின் பக்கம் ஏன் பூசவில்லை. வொர்க் பர்ம் ஹோமில் மீட்டிங்கில் மேலே மற்றும் நல்ல உடை போட்டுகொண்டு கீழே ஷார்ட்ஸ் போடுவது போல.. முன் பக்கம் மட்டும் பிங்க் வண்ணம் பூசியது ஏன் என்று பலரும் கிண்டல் செய்தனர்.

மீம்ஸ்
இணையத்தில் இது தொடர்பாக பல மீம்ஸ்களும் கூட வைரலாகின. ஆனால் இப்படி முன்னால் மட்டும் பிங்க் வண்ணம் அடிக்க வேறு காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பேருந்தின் இரண்டு பக்கங்களிலும் விளம்பரங்கள் வர உள்ளன. பிங்க் நிற ஸ்டிக்கரில் பேருந்தின் இரண்டு பக்கமும் பெரிய விளம்பரங்கள் வர உள்ளன. இந்த பிங்க் நிற ஸ்டிக்கர்கள் இரண்டு பக்கமும் முழுமையாக ஒட்டப்படும்.

வருமானம்
இதனால் அரசுக்கு நேரடியாக வருமானம் வரும். ஏற்கனவே சில பேருந்துகளில் பிங்க் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே பிங்க் பேருந்துகளில் இரண்டு பக்கமும் பிங்க் வண்ணம் அடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விளம்பர ஸ்டிக்கர்கள் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். நஷ்டத்தில் உள்ள போக்குவரத்து துறைக்கு வருமானம் கிடைக்கும். இதன் காரணமாக முன் பக்கம் மட்டும் பிங்க் பெயிண்ட் அடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications