வாய்ப்பே இல்லை.. வாலாட்ட முடியாது! பிடிஆர் களமிறக்கிய பிளான்.. முதல்வர் கைக்கு செல்லும் முழு "பவர்"
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பு கிட்டத்தட்ட நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த அறிவிப்பு காரணமாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளை நேரடியாக கண்காணிக்க போவதாக அரசு வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை பட்ஜெட் போடப்பட்டதும்.. ஒவ்வொரு துறைக்கு நிதி அனுப்பப்படும். அந்த நிதியை வைத்து ஒவ்வொரு துறையிலும் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
உதாரணமாக ஒரு துறையை எடுத்துக்கொள்ளுங்கள்.. அதற்கு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ஒதுக்கிய தொகை பல்வேறு கட்டமாக வெளியிடப்படும்.

பட்ஜெட்
இதை வைத்து அந்த துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அமைச்சர் சொன்ன திட்டங்கள், பொது திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும். இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு வரவு செலவுகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியில் எவ்வளவு செலவு செய்தோம், எவ்வளவு செலவு செய்யவில்லை என்று கணக்கு காட்ட வேண்டும். இதற்கு ஒவ்வொரு துறையிலும் தணிக்கை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளே இந்த கணக்குகளை செய்யும்.

நிதித்துறை
அந்த கணக்குகளை மொத்தமாக நிதித்துறைக்கு ஒவ்வொரு அமைப்புகளும் வழங்கும். இதுவே இத்தனை நாட்கள் வழக்கம். இந்த நிலையில் புதிய வழக்கமாக தற்போது மொத்தமாக ஒரு தணிக்கை துறையை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது மாநில தணிக்கை டைரக்டர் ஜெனரல் என்ற பதவி அடங்கிய ஒரு புதிய பிரிவு உருவாக்கப்படும். எல்லா துறைகளையும் இந்த பிரிவு நேரடியாக கண்காணிக்கும்.

தணிக்கை
நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்தான் இது பற்றிய அறிவிப்பை கடந்த பட்ஜெட்டில் வெளியிட்டார். அதோடு தற்போது இந்த பதவி நியமனத்திற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து துறைகளின் தணிக்கையும் ஒரு பிரிவின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. முன்னாள் ஐஏஏஎஸ் அதிகாரிகள் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளார். தனியார் ஆடிட் அதிகாரிகளுக்கும் இந்த பதவி வழங்கப்படலாம்.

என்ன நடக்கும்
இதன் மூலம் சிஏஜி போலவே இவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து துறைகளையும் ஆடிட் செய்வார்கள். இப்படி ஒருங்கிணைந்த ஆடிட் காரணமாக துறைகளில் ஊழல்களை தடுக்க முடியும். முன்பு ஒவ்வொரு துறையும் தங்கள் துறை ரீதியாக ஆடிட் செய்து கணக்கு மட்டுமே காட்டும். ஒரு துறை நினைத்தால் கொஞ்சம் பொய் கணக்கு கூட காட்ட முடியும். ஆனால் இப்போது ஒருங்கிணைத்த ஆடிட் செய்யப்படுகிறது.

நேரடி கண்ட்ரோல்
இதை நிதி துறை அமைச்சகமும், முதல்வரும் நேரடியாக கண்காணிப்பார்கள். இதனால் ஆடிட்டிங்கில் ஏதாவது குளறுபடி இருந்தால் கண்டுபிடிக்க முடியும். அதாவது எந்த துறையிலும் யாரும் வாலாட்ட முடியாது. யாரும் எந்த முறைகேடும் செய்ய வாய்ப்பே இருக்காத நிலைமை ஏற்படும். முதல்வர் நேரடியாக துறைகளின் வரவு செலவுகளை கண்காணிக்க முடியும். முதல்வருக்கு கிடைத்திருக்கும் இந்த பவர் காரணமாக.. துறைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications