பிரக்ஞானந்தா வென்ற அந்த நொடி.. நடந்த சம்பவம்.. அந்த போட்டோவை பார்த்தீங்களா? தமிழ்நாட்டின் பெருமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஸ் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. இந்த நிலையில் நேற்று வெளியான புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

சக இந்திய வீரரான அர்ஜுனை டை ப்ரேக்கர் சுற்றில் வீழ்த்தி அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றார். நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் தோல்வியின் விளிம்பில் இருந்த பிரக்ஞானந்தா அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஆட்டத்தை டிரா செய்வது போல வந்தார்.

Why does the Chess world celebrate this picture of R Praggnanandhas mother after he wins the World cup Semi-Finals?

கடைசி கட்டத்தில் எதிர்பார்க்காத மூவ்களை செய்த பிரக்ஞானந்தா கடைசியில் திரில் வெற்றி பெற்றார். டை பிரேக்கர் வரை சென்று பிரக்ஞானந்தா இந்த ஆட்டத்தில் வென்றார். இதன் மூலம் அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா சென்றுள்ளார்.

அரையிறுதியில் அசர்பைஜான் வீரர் நிஜாத்தை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. பக்கூ, அசர்பைசான் நாட்டின் தலைநகரம் ஆகும். இங்குதான் இந்த தொடர் தற்போது நடந்து வருகிறது. விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு இந்த தொடரில் அரையிறுதி வரை செல்லும் இரண்டாவது இந்தியர் பிரக்ஞானந்தாதான்.

இந்த தொடரில் வென்று அவர் சாம்பியன் பட்டத்தை இதன் மூலம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. . ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை செஸ் தொடர், ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடர் முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. அதனால் தொடரில் வென்று பிரக்ஞானந்தா செஸ் உலகின் புதிய ஜாம்பாவனாக உருவெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த உலகக்கோப்பை செஸ் தொடரில் சர்வதேச அளவில் 206 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இத்தனை பேர் போட்டியில் டாப் 4 வீரர்களுக்கு இடையிலான போட்டி நடக்கும் பிரிவிற்குள் பிரக்ஞானந்தா முன்னேறி இருக்கிறார்.

இதனால் அவருக்கு ஏற்கனவே பரிசுத்தொகை கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் உறுதியாகிவிட்டது. இனி இந்த தொடரில் தோல்வி அடைந்து வெளியேறினால் கூட குறைந்தபட்சம் 35 லட்சம் ரூபாய் இவருக்கு கிடைக்கும். இந்த நிலையில்தான் நேற்று வெளியான புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

அம்மா பாசம்: இந்த தொடரில் நேற்று போட்டியின் போது இவரின் அம்மா அங்கே தனியாக அமர்ந்து இருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. தொடக்கத்தில் பிரக்ஞானந்தா தோல்வி அடைவது போல இருந்த போது தலையில் கைவைத்துக்கொண்டு பிரக்ஞானந்தா அம்மா தனியாக அமர்ந்து இருந்தார்.

அதன்பின் பிரக்ஞானந்தா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவரின் அம்மாவும் நிமிர்ந்து உட்கார தொடங்கினார். கடைசியில் பிரக்ஞானந்தா வெற்றிபெற்ற போது அவரின் தாயார் அதை பெருமையோடு பார்த்தார். இந்த புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

தனது மகன் பிரக்ஞானந்தாவை அவரின் அம்மா பெருமையோடு பார்த்த அந்த தருணம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் இந்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. பலரும் இணையத்தில் இதை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+