அட ராமர் இப்படி ஒரு போஸ்டிங்ல இருக்காரா? எம்பி சு.வெங்கடேசன் போட்ட "அந்த" போட்டோ.. ஒரே குழப்பம்!
சென்னை: விஜய் டிவி புகழ் ராமருடன் சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் ராமர். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் "spin off" நிகழ்ச்சி நடத்தி தமிழ்நாடு முழுக்க இவர் பேமஸ் ஆனார்.
இந்த நிலையில் மதுரை எம்பி சு வெங்கடேசனை சம்பீத்தில் இவர் சந்தித்தார்.

மதுரை எம்பி
மதுரை சிபிஎம் எம்பி சு வெங்கடேசன், அங்கு தொகுதி வாரியாக பல்வேறு கிராமங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கொட்டாம்பட்டி, சொக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக சு. வெங்கடேசன் ஆய்வு செய்தார். அங்கு உள்ள ஊராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து மற்றும் மக்களுடன் சந்திப்பு நடத்தினார். தினமும் ஒரு ஊராட்சி வீதம் அவர் மக்களை சந்தித்து வருகிறார்.

விவசாயிகள் திட்டம்
அதோடு அங்கு இருக்கும் விவசாயிகளை சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் உங்களுக்கு வந்து சேர்ந்ததா என்று சோதனை செய்தார். பல்வேறு விவசாயிகளுடன் நேரடியாக பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து கிராமங்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் சு வெங்கடேசன் கேட்டறிந்தார். இந்த நிலையில் மதுரை எம்பி சு வெங்கடேசனை சமீபத்தில் இவர் சந்தித்தார்.

விஏஓவா?
இது தொடர்பாக ட்விட் செய்த சு. வெங்கடேசன் எம்பி, இன்று கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன். மகிழ்ச்சி .என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதில் ராமருடன் இருக்கும் புகைப்படத்தை சு. வெங்கடேசன் பகிர்ந்து உள்ளார்.

ராமர் பதவி?
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் வருபவர் ராமர். காமெடியான மக்கள் முன் அறியப்படுபவர். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கூறி தமிழ்நாடு முழுக்க இவர் பிரபலம் அடைந்தார். இவர் விஓஏவாக இருக்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரியாது. இந்த நிலையில்தான் சு வெங்கடேசனை அவர் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னது ராமர் விஏஓவா? இது எப்போ? இவ்வளவு நாள் தெரியாம போயிடுச்சே என்று நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications