"நடாஷா" என்றால் நம்பிக்கை! ஒலிம்பியாட்டில் எல்லோரும் திரும்பி பார்த்த ஒரு வீராங்கனை! நெகிழ்ச்சி கதை!
சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் அரங்கிற்கு தினமும் நடாஷா ஆட வரும் போதெல்லாம் அங்கு இருக்கும் பல வீரர், வீராங்கனைகள் இவரை வியப்புடன்தான் பார்க்கிறார்கள். 24 வயதாகும் இந்த வீராங்கனை போர்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்தவர்... இவருக்கு பின் நெகிழ்ச்சியான கதை ஒன்று உள்ளது.
நடாஷா ஒவ்வொரு முறை அரங்கிற்கு வரும் போதெல்லாம் வியந்து பார்க்காத ஆட்கள் கிடையாது. போட்டி முடிந்ததும் இவரிடம் சென்று பேட்டி எடுக்காத ஆட்கள் கிடையாது.
அந்த அளவிற்கு இவர் சிறப்பாக ஆடுவார் என்றால் ஆம் ஆடுவார். போர்டோ ரிக்கோவின் நம்பர் 2 வீராங்கனை இப்போது இவர்தான்.
ஆனால் இவரை சக வீரர்கள், வீராங்கனைகள் வியப்பாக பார்க்கவும், மீடியா ஆச்சர்யமாக பார்க்கவும் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

நடாஷா
நடாஷாவிற்கு பார்வை குறைபாடு இருக்கிறது என்பதே இதற்கு காரணம். இவருக்கு இடது கண்ணில் சுத்தமாக பார்வை இல்லை. வலது கண்ணில் 20 சதவிகிதம் மட்டுமே பார்வை உள்ளது. மொத்தம் 20 சதவிகிதம் பார்வையோடு இவர் செஸ் ஆடி வருகிறார். அதிலும் தனது வேகமான மூவ்கள் மூலம் அசத்தி வருகிறார். இதுதான் இவர் அதிகம் கவனிக்கப்பட காரணம். நடாஷா இந்த பார்வை குறைபாட்டோடு செஸ் ஆடும் முறையே தனியானது. இவருக்கு என்று பிரெய்லி போர்ட் உள்ளது.

பிரெய்லி
இவரின் உதவியாளர் ஒருவருடன் ஆடுகிறார். இந்த பிரெய்லி போர்டில் இவர் காய்களை நகர்த்துவார். அதே மூவ்களை இவர் அருகில் இருக்கும் உதவியாளர் எதிரணி வீரர் ஆடும் போர்டில் நகர்த்துவார். எதிரணி வீரர் மீண்டும் அவரின் காயை நகர்த்தியதும்.. நடாஷாவிடம் அதை உதவியாளர் தெரிவிப்பார். இதன் மூலம் எதிரணி வீரரின் மூவை தெரிந்து கொண்டு அதன்பின் நடாஷா மீண்டும் காய்களை நகர்த்துவார். மொத்தம் இரண்டு போர்ட் வைத்து ஆடுவார்கள். அதில் ஒன்று பிரெய்லி போர்ட்! இப்படித்தான் இவர் பிரெய்லி போர்ட் உதவியுடன் ஆடி வருகிறார்.

வெற்றி
இவருக்கு செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் டைமரை கூட உதவியாளர்தான் பார்த்து சொல்ல வேண்டும். இந்த சீசனில் 2 போட்டிகளில் டிரா, ஒன்றில் வெற்றி, 3ல் தோல்வி அடைந்து உள்ளார். போர்டோ ரிக்கோவில் பெண்கள் பிரிவில் இவர்தான் நம்பர் 2 வீரர். சர்வதேச அளவில் பெண்கள் பிரிவில் இவர் 1924 புள்ளிகளை கொண்டு உள்ளார். இவர் பிரெய்லி செஸ் போர்டுடன் ஒவ்வொரு முறை வரும் போதும் அந்த போர்டை பார்க்கவே பலர் வருகின்றனர். இவருக்கு செஸ் போட்டியில் பயன்படுத்தப்படும் டைமரை கூட உதவியாளர்தான் பார்த்து சொல்ல வேண்டும். இந்த சீசனில் 2 போட்டிகளில் டிரா, ஒன்றில் வெற்றி, 3ல் தோல்வி அடைந்து உள்ளார். போர்டோ ரிக்கோவில் பெண்கள் பிரிவில் இவர்தான் நம்பர் 2 வீரர். சர்வதேச அளவில் பெண்கள் பிரிவில் இவர் 1924 புள்ளிகளை கொண்டு உள்ளார். இவர் பிரெய்லி செஸ் போர்டுடன் ஒவ்வொரு முறை வரும் போதும் அந்த போர்டை பார்க்கவே பலர் வருகின்றனர்.

பிரெய்லி
இது தொடர்பாக ஊடகங்களுக்கு நடாஷா அளித்த பேட்டியில், நான் 12 வயதில் இருந்து ஆடி வருகிறேன். முதலில் சாதாரண போர்டுகளில் ஆடுவேன். அப்போதெல்லாம் எனக்கு தலைவலி கடுமையாக இருக்கும். போர்டை சரியாக பார்க்கக் முடியாது. அதன்பின் பிரெய்லி போர்ட் பற்றி தெரிந்து கொண்டேன். சில வருடங்களாக இதில் ஆடி தேசிய அளவில் ரேங்கிக்கில் முன்னேறி இருக்கிறேன். என் வீட்டில் உள்ளவர்களுக்கு செஸ் பற்றி தெரியாது.

பாதுகாப்பு
இருந்தாலும் எனக்கு அவர்கள் ஊக்கம் அளிக்கிறார்கள். எங்கள் தேசிய அணியும் எனக்கும் ஊக்கம் அளிக்கிறது. இந்த ஒலிம்பியாட் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். பாதுகாப்பாக உணர்கிறேன். என்னை பார்த்து எங்கள் நாட்டில் மேலும் பெண்கள் செஸ் ஆட வந்தால் எனக்கு சந்தோசம் என்று நம்பிக்கையாக பேசுகிறார் நடாஷா.
-
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications