ஆதாரங்களை எடுக்கும் அஸ்ரா கார்க்.. SIT வேண்டாம்.. பதறி கோர்ட்டுக்கு ஓடிய தவெக.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் நடந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (TVK) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். பலருக்குக் காயம் ஏற்பட்டது. இந்த மனு, வழக்கறிஞர்கள் டிக்ஸிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால், மற்றும் யாஷ் வி. விஜய் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 3 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

TVK Vijay

அந்த உத்தரவில், காவல் துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டு, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. காவல்துறையின் விசாரணையின் சுதந்திரத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியும், தமிழ்நாடு காவல்துறை மூத்த அதிகாரிகள் மட்டுமே கொண்ட SIT ஐ நியமித்தது தவறு என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட SIT நியமனம், மனுதாரரான கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக. குறிப்பாக மாநில காவல்துறையின் சுதந்திரமான செயல்பாடு குறித்து உயர் நீதிமன்றம் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த பிறகும் இது நியாயமில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

எஸ்ஐடியை எதிர்க்க என்ன காரணம்?

கூட்டத்தில் திட்டமிட்ட சதி காரணமாகவே குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது குறித்து அனைத்து கோணங்களிலும் ஒரு பாரபட்சமற்ற விசாரணை தேவை என்றும் மனு வலியுறுத்தி உள்ளது. அதேபோல் TVK தலைவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர் என்றும், மக்களுக்கு உதவவில்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறிய விமர்சனத்தையும் இந்த மனு எதிர்க்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் தவெக கட்சிக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டதால், கட்சிக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துகளும், வழிகாட்டுதல்களும் எந்தவிதமான உண்மைச் சரிபார்ப்பும், ஆதாரம் பரிசீலனையும் இன்றி வெளியிடப்பட்டதாகவும், கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் பதிலளிக்க வாய்ப்பு அளிக்கப்படாமல், இயற்கை நீதி மற்றும் நியாயமான விசாரணை கொள்கைகளை மீறுவதாகவும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சிலர் மயக்கம் அடைந்ததாக தகவல் கிடைத்தவுடன், கட்சித் தலைமையும் தொண்டர்களும் உடனடியாக மருத்துவ உதவி மற்றும் நிவாரணம் வழங்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் இதை கோர்ட் கருத்தில் கொள்ளவில்லை என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ஆதாரங்களை திரட்டும் அஸ்ரா கார்க்

கரூர் விவகாரம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இரண்டு எஸ்பிக்கள், ஒரு ஏடிஎஸ்பி, இரண்டு டிஎஸ்பி, ஐந்து இன்ஸ்பெக்டர்களும் உள்ளனர். இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

அங்கே உள்ளே மக்களிடம் விசாரணை குழு முக்கிய வாக்குமூலங்களை பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களிடமும் அவர்களின் குடும்பங்களிடமும் ஆதாரங்களை பெற்றுள்ளனர். விஜய் தாமதமாக வந்தது, நீர் கூட கொடுக்காதது, முறையாக ஏற்பாடுகளை செய்யாதது உள்ளிட்ட ஆதாரங்களை இந்த SIT திரட்டி வருகிறது.

அதேபோல் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போலீஸ் அறிவுரையை ஏற்க மறுத்தது. போலீசார் கொடுத்த திட்டங்களை ஏற்க மறுத்தது, முன்கூட்டியே வாகனத்தை நிறுத்த சொல்லியும் ஏற்க மறுத்தது உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ஆதாரங்களாக திரட்டி வருகிறார்கள்.

கரூர் நிகழ்விற்கு பின் வதந்தி பரப்பியது, நிறைய கான்ஸ்பிரசி தியரியை பரப்பியது உள்ளிட்ட விஷயங்களையும் இந்த குழு விசாரித்து வருகிறது. இந்த SIT அறிக்கை விஜய்க்கு பெரிய சிக்கல் ஆகும். விஜய்க்கு எதிராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+