விஜய்க்கு 6 மணிக்கு மேல் நேரம் ஆகாதா? ஸ்டாலின் பலமடைந்து விடுவாராம்.. பின்னணியில் "அவரா"?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கு, மாலை 6 மணிக்கு மேல் நேரம் கடந்துவிட்டால் அரசியல் ரீதியான செல்வாக்கும் அதிர்ஷ்டமும் கையைவிட்டுப் போய்விடும்.. அதிலும் ஸ்டாலின் இன்னும் பலமடைந்துவிடுவார்.. அதனால்தான், 6 மணிக்கு மேல் விஜய் எங்கியுமே பிரச்சாரம் செய்வதில்லை.. 6 மணிக்கு மேல் ஆட்டோவும் ஓடுவதில்லை" என்று மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

News focus tamil என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள ராஜகம்பீரன், "விஜய்யின் ஜாதகத்தில் அவர் விரைவில் ஜெயிலுக்கு போகப் போவதாகவும், அவருக்கு கண்டம் இருப்பதாகவும் ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.. அந்த ஆபத்தில் இருந்து தப்புவதற்காக, "நீங்களே முன்கூட்டியே புழல் சிறை மற்றும் காவல் நிலையத்திற்கு சென்று, அங்கு சில நிமிடங்கள் சட்டப்பூர்வமின்றி சாதாரணமாக உட்கார்ந்து வந்துவிட்டால், அந்தத் தோஷம் அல்லது கண்டம் நிவர்த்தி விடும்" என்று அந்த ஜோதிடர் பரிகாரமும் சொல்லியுள்ளார்.

Vijay Campaign Vijay Astrology Stalin Strength

ஜோதிடர் சென்ன அந்த பரிகார வழிமுறையை நம்பிதான் விஜய் புழல் ஜெயிலுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்று அப்படி அமர்ந்து வந்ததாகத் தவெக உள்வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஜோதிடர் ரத்தன் பண்டிட்

அடுத்து விஜய் பிரதமர் ஆவார் என்று சொல்வதை யார் கிளப்பிவிட்டது? ரத்தன் பண்டிட் தான் கிளப்பி விட்டுள்ளார்.. இப்போது ரத்தன் பண்டிட் போடும் வரைபடித்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்பதையும், அவருடைய வழிகாட்டலில்தான் எல்லாமே நடக்கிறது என்பதையும் தவெக கட்சியினர் ஒப்புக்கொள்வார்களா? இவர் அளவுக்கு அதிகமாகப் பொய் கூறி ஜெயலலிதாவிடம் மாட்டிக்கொண்டு விரட்டப்பட்டார்.

இப்பொழுது விஜய் பிரதமர் ஆக வேண்டும் என்று சொல்வது ஒருபோதும் நடக்காது. ஜோதிடர் சொல்வதெல்லாம் அப்படியே நடக்குமா? உங்களுக்கு சுயபுத்தியும் பகுத்தறிவும் இருக்கிறதா இல்லையா?

விஜய் பிரதமர் ஆவார்

விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவரின் பெயர் மிகவும் பரிச்சயமானதாகும். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கிவருகிறார்.. அவர் பேசும் விஷயங்கள் அனைத்தும் கவனத்தை பெறுகின்றன. விஜய் ஏன் மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யவில்லை என்பதற்கு அவரே விளக்கமும் அளிக்கிறார். அதாவது, 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என்பது போல, திமுக என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது, அப்படி உச்சரித்தால் திமுகவுக்கு பவர் கூடிவிடுமாம்.

மாலை 6 மணிக்கு மேல் நேரம் கடந்துவிட்டால் அரசியல் ரீதியான செல்வாக்கும் அதிர்ஷ்டமும் கையைவிட்டுப் போய்விடும்.. அதாவது ஸ்டாலின் இன்னும் பலமடைந்துவிடுவார்.. இதையெல்லாம் ஜோதிடர் சொன்னதால்தான், 6 மணிக்கு மேல் விஜய் பிரச்சாரம் செய்வதில்லை..

விஜய் அடுத்து பிரதமர் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் பின்னணியில் ரத்தன் பண்டிட்டே உள்ளார். மேட்டூர் அணையைத் திறப்பதில் காலம் தாழ்த்திவிட்டு, ஆடம்பரமாகத் தனி விமானத்தில் சென்று திறப்பது போன்ற செயல்கள் ஜோதிடரின் பேச்சின்படிதான் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஒருபுறம் பெரியாரைக் கொள்கை வழிகாட்டியாக விஜய் சொல்லிக்கொண்டு, மறுபுறம் ஜோதிடர்களை நம்புவது முரண்பாடாக உள்ளது.

150 தொகுதிகளில் வெற்றி

தேர்தல் முடிவுகளுக்கு முன்பு விஜய் 150 தொகுதிகளில் தனியாக வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்று ஜோதிடர் கணித்தபோதிலும், 108 இடங்கள்தே கிடைத்தன. உலகத்தில் எத்தனையோ ஜோதிடர்கள் இருந்தும் சுனாமி வருவதை எந்த ஜோதிடராவது முன்கூட்டியே சொன்னார்களா? கொரோனா வரப்போவதை முன்கூட்டியே சொன்னார்களா?

வெத்தலையில் மை போட்டுப் பார்த்த கிராமத்து மூடநம்பிக்கைகளைப் போன்றதுதான் விஜய் செய்வதும்.. இப்போது தவெகவின் எழுச்சியை ஒடுக்கவும், ராகுல் காந்தியை எதிர்கொள்ளவும் சோஷியல் மீடியாவில் பெருமளவில் பணம் செலவிடப்படுகிறது..

விரட்டி விட்ட ஜெயலலிதா

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஜோதிடர் பேச்சைக் கேட்டு நள்ளிரவில் சிலைகள் பல மாற்றப்பட்டன.. ஜோதிடர்கள் சொல்வது போலவே அனைத்து காரியங்களும் நடக்கும் பட்சத்தில் சுயபுத்தியும் பகுத்தறிவும் எங்கே போகிறது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்போதுமே தன்னை வெளிப்படையானவராகவே காட்டிக்கொண்டாரே தவிர, பெரியாரை தனது வழிகாட்டியாக சொன்னதில்லை.

ஜோதிடர் ரத்தன் பண்டிட் முன்பு ஜெயலலிதாவிடம் நெருக்கமாக இருந்த போதிலும், அவர் சொன்ன பொய்களை அந்த அம்மா கண்டுபிடித்துவிட்டதால் அங்கிருந்து விரட்டப்பட்டார். முக்கால்வாசி பொய் என்பதை ஜெயலலிதா கண்டுபிடித்து விட்டார்.

இப்போது விஜய் பிரதமர் ஆவார் என்பது போன்ற அதீதக் கணிப்புகளை சொல்லி வருகிறார்.. எதிர்காலத்தில் தேர்தல் முடிவுகள் மாறும்போது இதே ரத்தன் பண்டிட் பனையூர் பகுதியில் பொதுமக்களிடம் அடி வாங்கும் நிலை ஏற்படும்.. ஜெயலலிதா செய்ததைப் போலவே தவெக தரப்பினரும் அவரை ஒரு நாள் கழட்டிவிடுவார்கள்" என்றெல்லாம் எச்சரிக்கிறார் ராஜகம்பீரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+