Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay- Sangeetha: கரூர் தொடங்கி சங்கீதா விவாகரத்து வரை! விஜய்க்கு ட்விஸ்ட்களை கொடுத்த 27ஆம் தேதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசியல் பயணத்தின் ஒவ்வொரு முக்கிய திருப்பமும் ஒரே தேதியில் - 27-ஆம் தேதியில் - நடைபெறுவது தற்செயலா அல்லது திட்டமிட்ட உத்தியா என்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தொண்டர் ஒருவர் வெளியிட்ட ஒரு போஸ்ட் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சபட்ச நட்சத்திரம் என கூறிக் கொள்ளும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியதிலிருந்தே அவருக்கு பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு மனைவி சங்கீதா கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

vijay sangeetha divorce

இந்த நிலையில் 27ஆம் தேதியானால் விஜய்க்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடுகிறது, அதே நேரம் சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளது என அவரது ரசிகர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த போஸ்டில் "27th Timeline - Coincidence?" என்று தொடங்கி, கடந்த ஆறு மாத நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளது.

அதில்:
• செப்டம்பர் 27, 2025 - கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம்: வேலுசாமிபுரத்தில் தவெக பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் (9 குழந்தைகள் உட்பட) உயிரிழந்த கொடிய நிகழ்வு.

• அக்டோபர் 27 - பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அவர்களை எல்லாம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் வரவழைத்து சந்திப்பு.

• நவம்பர் 27 - முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் டிவிகேவில் இணைந்து, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராக நியமனம் (இந்த விஷயத்தை பிரச்சனையாக சொல்ல முடியாது. செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் இணைப்பால் தவெகவுக்கு நன்மைதான்).

• டிசம்பர் 27 - விஜய்யின் இறுதிப் படமான 'ஜனநாயகன்' ஆடியோ வெளியீடு.

• ஜனவரி 27, 2026 - 'ஜன நாயகன்' சென்சார் வழக்கு மீண்டும் புதிய விசாரணைக்கு மாற்றம்; சென்னை உயர் நீதிமன்றம் சிங்கிள் ஜட்ஜ் உத்தரவை ரத்து செய்தது.

• பிப்ரவரி 27 - விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல்; நடிகையுடன் திருமணத்துக்கு புறம்பான உறவு, மன உளைச்சல், நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்.

போஸ்ட்டின் முடிவில் "Mar 27 - Be Ready Guys" என்று எழுதியுள்ளது. இந்த போஸ்ட் பல லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகியுள்ளது.

ரசிகர்கள் இடையே இரு தரப்பு விவாதங்கள் எழுந்துள்ளன. சிலர் "இது தற்செயல் நிகழ்வுகளின் தொடர்" என்கின்றனர். மற்றவர்கள் "அரசியல் உத்தியாக 27-ஆம் தேதியை தேர்வு செய்கிறார்கள்" என்கின்றனர்.

குறிப்பாக, கரூர் சம்பவத்துக்குப் பின் ஏற்பட்ட எதிர்மறை பிம்பத்தை சரி செய்யும் வகையில் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவரை இணைத்தது, பட வெளியீட்டு சிக்கல்கள், தற்போது தனிப்பட்ட விவாகரத்து செய்தி வரை - அனைத்தும் ஒரே தேதியில் வருவது பலரை ஆச்சரியப்படுத்துகிறது.

சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன வேதனை, நம்பிக்கை இழப்பு ஆகியவை விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. நீதிமன்றம் மார்ச் 20 அன்று விஜய்யை ஆஜராக உத்தரவிட்டுள்ளது. விஜய் தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இந்த '27' டைம்லைன் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்ச் 20 அன்று என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசியல் விமர்சகர்கள் "தனிப்பட்ட சோதனைகளும் அரசியல் வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ள இந்த காலகட்டத்தில், விஜய்யின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+