விஜயகாந்த் பெயரையே தூக்கியாச்சு.. அதுவும் "2 எல்!" பிரேமலதா பண்ணதை பார்த்தீங்களா?
சென்னை: ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்தின் அக்கவுண்ட்டில் அவரது பெயரை தூக்கிவிட்டு தனது பெயரில் இரு L-களை சேர்த்து பிரேமலதா மாற்றிக் கொண்டார். இது கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் கட்சி பணிகளில் ஆக்டிவ்வாக செயல்பட முடியவில்லை. ஆனால் தனது கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நிமோனியா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28ஆம் தேதி விஜயகாந்த் காலமானார். அவரது இறப்பு திரைத்துறையினர் மட்டுமல்லாமல் அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவருக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறந்து 14 நாட்கள் ஆன நிலையிலும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவருடைய சமாதிக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகை தருகிறார்கள்.
அங்கு விஜயகாந்த் குடும்பத்தினரும் கட்சியினரும் அன்னதானம் செய்கிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார் பிரேமலதா. கேப்டன் இருக்கும் போதே பொதுக் குழு, செயற்குழு கூட்டப்பட்டு அவரிடம் இருந்த பொதுச் செயலாளர் பதவி பிரேமலதாவுக்கு கை மாறியது.
கேப்டன் இறந்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் அவருடைய ட்விட்டர் கணக்கை மாற்றியுள்ளது ரசிகர்களிடமும் கட்சியினரிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரேமலதா premallatha vijayakant @imPremallatha என மாற்றியுள்ளார். இதில் பிரேமலதாவில் எதற்காக இரு எல்களை போட்டிருக்கிறார் என தெரியவில்லை. ஒரு வேளை அவரது ட்விட்டர் ஹேண்டில் ஏற்கெனவே Premalatha Vijayakant என்ற பெயரில் இருந்ததால் அவரது பெயரில் எல் சேர்த்தாரா என தெரியவில்லை.
இதை எதற்காக மாற்றினார் என்பதற்கான தகவல்களும் சரிவர தெரியவில்லை. ஒரு வேளை நியூமராலஜிபடி எல் சேர்த்தாரோ என்றெல்லாம் சிலர் யோசித்து வருகிறார்கள். ஆனால் விஜயகாந்த் பெயரில் இருந்ததை தனது பெயருக்கு மாற்றியதற்கு நிறைய தொண்டர்களின் ஆதங்கங்கள் குவிகின்றன.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications