ஸ்டாலின் வரவர சரியா சாப்பிடறதில்ல.. தூங்கறதும் இல்லயாம்.. இருங்க வர்றேன்.. கூடவே டெல்லி சென்ற துர்கா
முதல்வருடன் துர்கா ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்
சென்னை: முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முதலாக பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றுள்ளார்... இதற்கு என்ன காரணம் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
ஸ்டாலினின் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் அவருக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருபவர் துர்கா ஸ்டாலின்.. இவர் அவ்வளவா பொதுஇடங்களில் பேசியதில்லை..
ஆனால், எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதை தீர்க்கமாக எடுக்க கூடியவர்... தெளிவாக எடுக்கக்கூடியவர்.. நிறைய படிப்பவர்.. அதிலும் கருணாநிதியின் புத்தகங்களை விரும்பி படிப்பவர்..

பகுத்தறிவு
என்னதான், பகுத்தறிவு சிந்தனை குறித்து திமுக பேசி வந்தாலும், தனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது என்பதை ஓபனாகவே போட்டுடைப்பவர்.. வெளிப்படையாகவே கோவில்களுக்கு சென்று வருபவர்... எதையும் யாருக்காகவும் பூசி மெழுகியதில்லை.. இப்போதுகூட ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றபோது, துர்கா வடித்த கண்ணீரின் அர்த்தம் பலருக்கும் நெகிழ்ச்சியை தந்தது.

ஸ்டாலின்
இந்நிலையில்தான், டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுடன் துர்காவும் சென்றுள்ள தகவல் வெளியானது.. வழக்கமாக ஸ்டாலின் ஓய்வு எடுக்கிறார் என்றால், வெளிநாடு, அல்லது வெளியூர்களுக்கு செல்வார்.. அப்போது கட்டாயம் துர்காவும் உடன் செல்வார்.. ஆனால் அரசு முறை பயணமாக ஸ்டாலின் இப்போது டெல்லி சென்றுள்ளதால், துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளது ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.

காரணம் என்ன?
இதற்கான காரணமும் திமுக தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது.. முகஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் அவர் உடல்நிலை சரிவர கவனிக்காமல் உள்ளாராம்.. சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை.. தூங்குவதில்லை.. வழக்கமாக எடுத்து கொள்ளும் மருந்துகளைகூட எடுத்து கொள்வதில்லையாம்..

உடல்நிலை
கொரோனா தொற்று காலத்தில் ஸ்டாலின் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டும் என்பதில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்.. சரியான நேரத்தில் சாப்பாடு மற்றும் மருந்து, மாத்திரைகளை ஸ்டாலின் எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்காவே அவருடன் துர்கா ஸ்டாலினும் பயணம் செய்துள்ளதாக திமுக தரப்பில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications