வருமான வரி ITR தாக்கல் செய்ய போனவங்களுக்கு ஷாக்.. பல நாள் ஆகிடுச்சே.. ஸ்டன் ஆன சம்பளதாரர்கள்
சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை வெளியிட்டு உள்ளது. பார்ம் 1 மற்றும் 4ஐ வெளியிட்டு உள்ளது. ஆனால் எல்லோருக்கும் இந்த பார்ம் இன்னும் வெளியாகவில்லை என்பதுதான் சிக்கலே.
இன்னும் பலருக்கு ITR விண்டோ திறக்கவில்லை. அதாவது பார்ம் 1 மற்றும் 4ஐ வெளியிட்டு உள்ளனர். ஆனால் அதை தாக்கல் செய்யலாம் என்று போனவர்களுக்கு இன்னமும் வருமான வரி பக்கம் திறக்கப்படவில்லை. e filling இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

இன்று மே 9.. ஏற்கனவே 1 மாதம் சென்றுவிட்டது. இனி மக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்தாலும் பல லட்சம் பேர் தாக்கல் செய்யாமல் போகலாம். இந்த தாமதம் வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பளதாரர்கள் பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்யும் பட்சத்தில் பின் வரும் விஷயங்களை கவனிக்க வேண்டும்:
பழைய வருமான வரி முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது
உங்களின் சம்பளத்தின் முதல்
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது மேற்கண்ட வரி விதிக்கப்படும்.
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications