வரப்ப எல்லாம் சந்திக்க முடியாது.. திருச்சி வரும் மோடி.. சேலத்திலேயே இருக்கும் எடப்பாடி.. மூண்ட மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி மாதம் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க போவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த பயணத்தில் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்;

ஜன.2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி திருச்சி வருகிறார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.

Why Edappadi Palanisamy wont meet Prime Minister Modi on his Tamil Nadu visit?

மோடி சந்திப்பு: இந்த பயணத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளாராம். இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணி பற்றி முடிவு எடுக்கும். அதிமுக கூட்டணி முறிந்தாலும் திமுகவை தங்கள் பக்கம் இழுக்கலாம், இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை தங்கள் பக்கம் கொண்டு வரலாம்.

அப்படி செய்வதன் மூலம் தமிழ்நாட்டில் கால் வைக்கலாம் என்ற கணக்கை டெல்லி போட்டது. ஆனால் எத்தனை ரெய்டு நடந்தும், கைதுகள் நடந்தும் கூட திமுக - பாஜக இடையே உறவு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் அதிமுகவுடன் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.

தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பே கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்பதால்.. பாஜக இதில் தெளிவாக இருக்கிறதாம். பிரதமர் மோடியின் இந்த தமிழ்நாடு பயணத்திலேயே கூட்டணியை பற்றி இறுதி முடிவு எடுக்க போகிறார்களாம்.

சந்திக்க மாட்டார்கள்: ஆனால் இந்த பயணத்தில் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்; சென்னையில் நேற்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிகமுகவின் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றம் உறுதி செய்த பின் நடந்த முதல் பொதுக்கூட்டம் ஆகும் இது. இதில் பாஜக கூட்டணி பற்றி ஒரு சின்ன தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை.

அதிமுகவின் 23வது தீர்மானத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்றப் பொது தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிடும் வகையில், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் களப்பணி ஆற்றிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதில் கூட கூட்டணி என்ற வார்த்தை இடம்பெறவில்லை. பாஜகவிற்கு அசுர பலம் இருந்தும் கூட்டணி பற்றி அதிமுக முடிவு எடுக்கவில்லை.

அதிலும் ஜனவரி 2ம் தேதி மோடி தமிழ்நாடு வர உள்ளார். அதற்கு முன் கூட்டணி அதிமுக முக்கிய முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றே கருதப்பட்டது. ஆனால் இன்று அப்படி ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

பேச்சு: இந்த கூட்டத்தில் பேசியது போது கூட அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்றுதான் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக - பாஜக கூட்டணி வைக்காது. அந்த கூட்டணி முடிந்துவிட்டது என்று கூறினார். இந்த நிலையில்தான் மோடி பயணத்திலும் அவரை எடப்பாடி சந்திக்க மாட்டார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+