ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்.. "அவர்" இன்னும் வீட்டையே காலி செய்யலையாமே.. என்னாச்சு?
அரசு பங்களாவை தனபால் இன்னும் காலி செய்யவில்லை என்கிறார்கள்
சென்னை: சபாநாயகர் அப்பாவுவுக்கு வீடு இல்லையாமே.. அரசு பங்களாவில் அவர் தங்கவுமில்லை.. இதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது கசிந்து வருகிறது.
சென்னை கீரின்வேஸ் சாலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசு பங்களாக்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்சரி, பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு இந்த பங்களாக்களில் தான் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

ஸ்டாலின்
அந்த வகையில், கடந்த 10 வருஷமாக அதிமுகதான் ஆண்டு வந்தது.. அதனால், அதிமுக மாஜிக்கள் இந்த பங்களாக்களில் தங்கி இருந்தனர்... தற்போது திமுக ஆட்சிக்கு வரவும், புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை ஒதுக்கீடு செய்யும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களையும் காலி செய்தனர்..

அவகாசம்
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மட்டும் பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்டிருந்த நிலையில், அவரை அந்த வீட்டிலேயே தங்கி கொள்ள ஸ்டாலின் ஓகே சொன்னார்.. அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் வீட்டை காலி செய்திருக்க வேண்டும்தான்.. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது, கிட்டத்தட்ட அமைச்சர் பதவிக்கு சமமானது.. கேபினட் பதவிக்கு ஒப்பானது..

கோரிக்கை
அதனால், தன்னை தொடர்ந்து அதே வீட்டில் தங்குவதற்கு அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.. இதற்கும் ஓகே சொன்னார் ஸ்டாலின். அதாவது நேர் எதிர்க்கட்சி தலைவர்கள், தன்னை காலமெல்லாம் விமர்சித்து வரும் தலைவர்கள், இனியும் விமர்சிக்க போகிறர்கள் என்று தெரிந்தும் இவர்களின் கோரிக்கைக்கு முதல்வர் சம்மதித்தது அவரது பெருந்தன்மை.

நோட்டீஸ்
இப்போது விஷயம் என்னவென்றால், முன்னாள் சபாநாயகர் தனபால் இன்னும் அந்த வீட்டை காலி செய்யவில்லையாம்.. இத்தனைக்கும் நோட்டீஸ் எப்போதோ தரப்பட்டுவிட்டது.. காலி செய்யும்படி அனைவருக்குமே ஓபனாக கோரிக்கையும் விடுக்கப்பட்டுவிட்டது.. கோரிக்கை விடுக்கப்படுகிறதோ இல்லையோ, ஆனால், புதிய ஆட்சி வந்ததும், நாமளாகவே வீட்டை காலி செய்திருக்க வேண்டும் என்பது மரபு.

வேறு வீடு
ஆனால், தனபால் இன்னும் காலி செய்யவில்லை.. குடியேறுவதற்கு வேறு வீடு பார்த்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. தனபால் தங்கி உள்ள வீடு, தற்போதைய சபாநாயகர் அப்பாவுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடு ஆகும்.. தனபால் அங்கேயே இருப்பதால், அப்பாவுவுக்கு தற்சமயம் வீடு இல்லாத சூழல் உருவாகி உள்ளது..

தர்மசங்கடம்
அதிமுக மாஜிக்களை காலி செய்யுங்கள் என்றும் சொல்லியாகிவிட்டது.. நோட்டீசும் தரப்பட்டுவிட்டது.. 2 மாசமும் முடிந்துவிட்டது.. வீட்டை காலி செய்யுங்கள் என்று தனபாலிடம் சொல்வதற்கு திமுக தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, விரைவில், மான்ய கோரிக்கை பட்ஜெட்டும் துவங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் சபாநாயகருக்கே குடியிருக்க வீடு இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications