நகமும் சதையுமாக இருந்த தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன்.. இப்படி சண்டை போட காரணமான அந்த கூட்டம்
Recommended Video
சென்னை: நகமும் சதையுமாக இருந்த டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் இப்படி ஆபாசமாக திட்டி சண்டை போட்டுக்கொள்ளும் அளவுக்கு பிரச்னை ஏற்படுவத்றகான காரணங்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவில் தங்கம் சேரப்போவதாக வெளியான தகவலால், தேனிக்கு புதிய நிர்வாகியை டி.டி.வி. தினகரன் நியமிக்கச் சொல்லியதாகவும், அதன் அடிப்படையில் தேனியில் நேற்று முன்தினம் அமமுகவின் கூட்டம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் போனில் கடுமையாக திட்டி உள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுக நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கடந்த ஒரு வாரமாகவே கசிந்து வருகின்றன.
இதை உறுதிபடுத்தும் வகையில் தங்கதமிழ்செல்வனும் தமிழக அரசை பாராட்டினார். அமைச்சர்களும் இதை வரவேற்றார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த டிடிவி தினகரன் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதில் வேறு ஒருவரை கட்சியின் நிர்வாகி பொறுப்பில் நியமிக்க முடிவெடுத்தகாக கூறப்படுகிறது.

டேவிட் அண்ணாதுரை
இது தொடர்பாக நேற்று முன்தினம் தேனியில் அமமுகவினர் ஒரு கூட்டம் போட்டதாகவும் கூறப்படுகிறது. மதுரை எம்.பி தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளராக நின்று தோல்வி அடைந்த டேவிட் அண்ணாதுரை, திருப்பரங்குன்றம் அ.ம.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மகேந்திரன் ஆகிய இருவரது தலைமையில் இந்த கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக புதிய நபரை நியமிப்பது தொடர்பாக பேசப்பட்டதாம்.

மதுரையில் கூட்டம் போடவா
இதனால் கோபமடைந்த தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி. தினகரனின் உதவியாளரை அழைத்து கோபத்தில் கடுமையாக திட்டி உள்ளார். அப்போது தங்க தமிழ்ச்செல்வன், "இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்றதை நிறுத்தச்சொல்லுப்பா. உங்க அண்ணனை நிறுத்தச்சொல்லு. நான் விஸ்வரூபம் எடுத்தா, நீங்க அழிஞ்சிபோவீங்க. நான் நல்லவன். நேற்று நீங்க தேனியில கூட்டம்போட்டீங்க. நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? பாரு... என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்கிட்ட சொல்லிடு. தோத்துப்போவ... என்னைக்கும் ஜெயிக்க மாட்ட" என்று கடுமையாக பேசியுள்ளார்.

ஆடியோ உண்மை தான்
நேற்று மாலை இந்த ஆடியோ வெளியான பின்னர், தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதவராளர்களுடன் கம்பத்தில் தனியாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடியோ குறித்து விளக்கம் அளித்த தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ உண்மை தான் என தெரிவித்துள்ளார். மேலும் தன்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுகவில் இணையும் தங்கம்
இதன் மூலம் சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியாகவும், டிடிவி தினகரனுக்கு நெருக்கமானவராகவும் இருந்த தங்க தமிழ்செல்வன் அமமுகவைவிட்டு வெளியேறுவது உறுதியாகவிட்டது. விரைவில் தங்க தமிழ்ச்செல்வன் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். விரைவில் தங்க தமிழ்ச்செல்வன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணையக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications