பூஞ்சை பிடித்து குவியல் குவியலாக கொட்டப்பட்ட புளி சோறு! வீணானது ஏன்? சமையல் கலைஞர் விளக்கம்
சென்னை: மதுரை அதிமுக மாநாட்டில் அண்டா அண்டாவாக சாதம் ஏன் மீந்து போனது என்பது குறித்து சமையல் கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மதுரைவாசிகளே ஸ்தம்பித்தனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து தலா 1000 முதல் 1500 வாகனங்களில் தொண்டர்கள் மதுரைக்கு படையெடுத்தனர்.

இந்த கூட்டத்தை பார்த்துவிட்டு இது மதுரை மாநாடா இல்லை சித்திரை திருவிழாவா என பேசும் போது அதிமுக நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களும் கேட்டனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இந்த நிகழ்வு களைகட்டியது.
இந்த விழாவுக்கு 10 லட்சம் பேர் வந்திருப்பார்கள் என சொல்லப்படுகிறது. மாநாட்டுக்கு வருவதற்காக சாப்பாடு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டன. சைவ உணவு பரிமாறப்படும் என முன் கூட்டியே சொல்லப்பட்டது. அது போல் புளி சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டது.
இதற்காக 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வருகிறார்கள் என சொல்லப்பட்டது. இவர்களுக்கு தேவையான அனைத்து மளிகை சாமான்களும் வாங்கித் தரப்பட்டன. இந்த நிலையில் அந்த உணவுகள் எல்லாம் வீணானது. புளி சாதம் வேகவில்லை, சாம்பார் சாதம் உப்பு சப்பில்லை என கூறி தொண்டர்கள் அப்படியே வாங்கிய சாதத்தை கொட்டிவிட்டனர்.
இதனால் மாநாட்டில் ஆங்காங்கே சாப்பாடு தட்டுகளில் கொட்டப்பட்ட உணவு இருந்தன. அது போல் அண்டா அண்டாவாக உணவு வீணடிக்கப்பட்டது. இதை சாப்பிட ஆள் இல்லாததால் அப்படியே பூஞ்சை பிடித்து வீணாகிவிட்டது. விழாவுக்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலானோர் இந்த உணவு நன்றாக இல்லை என கூறிவிட்டனர்.
அதுபோல் ஓபிஎஸ்ஸும் 2 நாளுக்கு முன்னாடி செய்த புளி சாதத்தை பரிமாறியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த உணவு வீணானது குறித்து அங்கிருந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில் விவசாயி இந்த அரிசியை விளைவிக்க எத்தனை கஷ்டப்படுகிறார். ஆனால் இப்படி உணவு வீணாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றாக இருந்தால் தொண்டர்கள் நிச்சயம் சாப்பிட்டிருப்பார்கள்.
நன்றாக இல்லாததே உணவு வீணுக்கு காரணம் ஆகும். இனியாவது சமையல் கலைஞர்கள் உணவு வீணாகும் விதத்தில் சமைக்காமல் அனைவரும் சாப்பிட்டு வாழ்த்திவிட்டு செல்லும் அளவுக்கு சமைக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் சமையல் கலைஞர் ஒருவர் கூறுகையில் நாங்கள் சனிக்கிழமையே உணவு சமைக்க வந்துவிட்டோம். ஞாயிற்றுக்கிழமைதான் மாநாடு.
நாங்கள் 6 ஆயிரம் சமையல்காரர்கள் வந்திருந்தோம். இங்கு புளி சாதம் செய்வதற்கு முதல் நாளே தம் போடப்பட்டு ரெடியாகிவிட்டது. மறுநாள் தாளித்து கொட்டுவது மட்டும்தான் நடந்தது. ஆனால் சாம்பார் சாதமே மதியம் 1 மணிக்குத்தான் தயாரானது. இது சூடாக இருந்ததால் தொண்டர்கள் விரும்பி சாப்பிட்டனர். இதனால் புளி சாதம் வீணானது. இரவு 8 மணிக்கு மாநாடு முடிந்தும் வெளியூர் செல்வோர் 10 மணி வரை சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கி சென்றனர். மற்றபடி உணவு நன்றாகத்தான் இருந்தது. இதை யாருக்காவது கொடுத்திருக்கலாம். ஆனால் இரவு நேரமாகிவிட்டதால் கொடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications