"உலக மார்க்கெட்டில் தங்கம் விலை குறையுது..உள்ளூரில் மட்டுமே எகிறுதே ஏன்.." விளக்கிய ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை இப்படித் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம் என்பதைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

தங்கம் விலை தினசரி புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 6,510ஆக உள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

Why gold price is raising in India despite decreasing in global markets explains Anand Srinivasan

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இரு நாட்களாகச் சற்று குறைந்தாலும் நமது நாட்டில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் ஏன் தங்கம் விலை அதிகரிக்கிறது.. வரும் காலத்தில் குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது வீடியோவில் "இந்தியாவில் தங்கம் விலை பெரியளவில் இறங்கவில்லை. நான் தங்கம் விலை குறையும் என்றே எதிர்பார்த்தேன். ஆனால், நான் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை.

உலக மார்க்கெட்டில் தங்கம் விலை சற்று குறைந்த போதிலும், இந்திய மார்க்கெட்டில் இன்று தங்கம் விலை குறையவே இல்லை. இந்திய மார்க்கெட்டில் இன்று தங்கம் விலை குறையாமல் இருக்க இந்திய ரூபாய் மதிப்பு தான் காரணம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதாலேயே இந்தியாவில் தங்கம் விலை குறையவில்லை.

இந்திய ரூபாய் மதிப்பு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் இப்போது 83.42ஆக இருக்கிறது. இது ஓராண்டில் 71 ரூபாயில் இருந்து கண்ணை மூடி திறப்பதற்குள் 83.42 ரூபாய்க்கு வந்துவிட்டது. தங்கம் விலை இந்தியாவில் குறையாமல் இருக்க இதுவும் ஒரு காரணம். இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தது என்பது தங்கத்திற்கு மட்டுமின்றி.. மருந்து நிறுவனங்களுக்கும் ஐடி நிறுவனங்களுக்கும் கூட நல்ல செய்தி தான்.

இதே டிரெண்ட் தொடர்ந்தால் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி சதவிகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை எகிறும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை என்றால் தங்கம் விலை அதிகரிக்காது. இந்த உலகில் இருக்கும் அனைத்து நாடுகளுமே (அனைத்து நாட்டு அரசுகள்) தங்கத்தை வாங்கியுள்ளன. இந்தியா மற்றும் சீனாவின் தங்கச் சேமிப்புகள் கூட அதிகரித்துள்ளன. ரஷ்யா துருக்கியும் கூட தங்கத்தை வாங்கியுள்ளன.

சர்வதேச சந்தை: இப்படி உலக நாடுகள் தொடர்ச்சியாகத் தங்கம் வாங்கி வருவதும் கூட தங்கம் விலை பெரியளவில் குறையாமல் இருக்க முக்கிய காரணமாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும் இந்திய ரூபாய் மதிப்பு குறைவதால் நமது நாட்டில் தங்கம் விலை அதிகரிப்பதாக ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும், இந்தாண்டு மட்டும் அமெரிக்க மத்திய வங்கி மொத்தம் ஏழு கூட்டங்களை நடத்த உள்ளது. அதில் வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொடும். அப்படிக் குறைக்கவில்லை என்றால் தங்கம் விலை சற்று குறையலாம் என்பதே ஆனந்த் சீனிவாசனின் கருத்தாக இருக்கிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+