"பொத்துனு" விழும் தங்கம் விலை! "இது" நடந்தால் போதும்! அடுத்து ஆனந்த் சீனிவாசன் சொன்ன முக்கிய மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை சில காலமாகக் குறைந்து வரும் நிலையில், தங்கம் விலை ஏன் குறைகிறது... எத்தனை காலத்திற்குத் தங்கம் விலை குறையும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இந்தியாவில் எப்போதும் தங்கத்திற்குத் தனி மதிப்பு இருக்கிறது. எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தாலும் தங்கத்தை வாங்குவதை மட்டும் பொதுமக்கள் தவிர்க்கவே மாட்டார்கள். இதன் காரணமாகவே நமது நாட்டில் திருமணம், காது குத்து போன்ற நிகழ்வுகளில் தங்கம் முக்கிய இடத்தை பெறுகிறது.

 Why gold price will see the drop in next 12 months explains Anand Srinivasan

நமது நாட்டில் மக்கள் எப்போதும் தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் பார்ப்பது இல்லை. அதை ஒரு சேமிப்பாகவும்.. அவ்வளவு ஏன் சொத்தாகவும் கூட பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே சிறு சிறுக தங்கத்தில் முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆனந்த் சீனிவாசன்: தங்கம் விலை நீண்ட கால நோக்கில் எப்போதும் அதிகரிக்கவே செய்யும். ஆனால், கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்றம் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில காலங்களில் ஒரு தங்கம் விலை கணிசமாகக் குறைந்தே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை ஏன் குறைகிறது. எவ்வளவு காலம் தங்கம் குறைவாகவே இருக்கும். இப்போது தங்கத்தை வாங்குவது சரியானதுதானா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது வீடியோ ஒன்றில் விளக்கியுள்ளார்

இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் கூறுகையில், "தங்கம் விலை அமெரிக்கச் சந்தையில் கடுமையாகக் குறைந்து வருகிறது. தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இப்போது இந்தியாவிலேயே கூட தங்கம் விலை ரூ. 5,390 என்ற ரேஞ்சிலேயே இருக்கிறது. அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தங்கம் விலை பெரிதாகக் குறையவில்லை. இந்தியா ரூபாய் மதிப்பு அழுத்தத்தில் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.

தங்கம் விலை: மேலும், முறைகேடாக இந்தியாவுக்குள் எடுத்து வரப்படும் தங்கமும் அதிகமாக இருக்கிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. எப்போதும் தங்கம் விலை குறைந்தால் தங்க விற்பனை அதிகரிக்கும். இதனால் தங்கம் விற்பனை செய்யும் பங்குகள் விலை அதிகரிக்கும். அதேநேரம் தங்கத்திற்குக் கடன் கொடுக்கும் நிறுவனங்களின் மதிப்பு குறையும்.

அடுத்த 12 மாதங்களுக்குத் தங்கம் விலை குறைவாகவே இருக்கும். இப்போது அமெரிக்க டாலர் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த உயர்த்த அமெரிக்க டாலர் மதிப்பும் அதிகரிக்கும். அதிக காலத்திற்கு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளதால், அங்கே கடன் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை குறைகிறது.

 Why gold price will see the drop in next 12 months explains Anand Srinivasan

தங்கம் மேலும் குறையும்: அமெரிக்க மத்திய வங்கி மேலும் ஒரு 0.25% வட்டியை ஏற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இப்போது கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் என்னைப் பொறுத்தவரை முதலில் ஒரு 0.25% சதவிகிதம்.. மேலும் ஒரு முறை 0.25% என இரண்டு முறை வட்டியை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏற்றினால் தங்கம் விலை மிகப் பெரியளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

ஆனால், எது இருப்பதிலேயே குறைவு என்பதை நம்மால் துல்லியமாகக் கண்டறிய முடியாது. எனவே, இந்த நேரத்தில் தங்கத்தை வாங்க மிகச் சிறந்த வாய்ப்பு.. நேரடியாகத் தங்கமும் வாங்கலாம். அல்லது கோல்ட் இடிஎப் முறையிலும் தங்கத்தை வாங்கலாம். மீண்டும் இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதால் தங்கத்தை வாங்கலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அடுத்த 12 மாதங்களுக்குத் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

இது பொதுவான செய்தி மட்டுமே. இதை வைத்து யாரும் முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கக் கூடாது. முதலீடுகள் செய்யும் முன்பு உரிய நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+