ஓவர்நைட்டில் அமெரிக்கா எடுத்த முடிவு! தங்கம் விலை நிற்காமல் சரிய இதுவே காரணம்! இனி எப்படி இருக்கும்
சென்னை: ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு ரெசிப்ரோக்கல் வரி என்று வரியை இஷ்டத்திற்கு அள்ளி வீசி இருக்கிறார். இதுபோன்ற வரி அறிவிப்புகள் வரும்போது பொதுவாகத் தங்கம் விலை புதிய உச்சத்திற்கே பறக்கும். ஆனால், நேர்மாறாக கடந்த இரு நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்! இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் தங்கம் என்பது கலாச்சார ரீதியாகவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஒரு பக்கம் திருமண சீசன் ஆரம்பிக்கவுள்ள நிலையில், தங்கத்தை வாங்க மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் சேமிப்பாகவும் தங்கத்திற்கு முக்கியமான இடம் இருக்கிறது. பெரும்பாலான இந்தியர்கள் தங்கத்தையே பிரதான சேமிப்பாகக் கருதுகிறார்கள்.

தங்கம் விலை
இதனால் தங்க விலை ஏற்றம் என்பது இந்தியர்களிடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை ஜெட் வேகத்தில் பறந்து வருகிறது. இதனால் மக்கள் தங்கத்தை வாங்க முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாகத் தங்கம் குறித்த கணிப்புகள் மக்களுக்கு உற்சாகம் தருவதாக இருந்தது. அதாவது தங்கம் விலை விரைவிலேயே 10-30% வரை கூட சரியலாம் என்றார்கள். அந்தளவுக்குச் சரியவில்லை என்றாலும் ஓரளவுக்கு இப்போது குறைந்தே வருகிறது.
இன்றைய தினம் கூட சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 73,200-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிராம் ரூ.9,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் விஷயம் என்னவென்றால் கடந்த இரு நாட்களாக உலக வர்த்தகத்தையே புரட்டிப் போடும் வகையிலான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டு வருகிறார்.
டிரம்ப் வரிகள்
நேற்றைய தினம் இந்தியா மீது 25% வரியை விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு. இன்று காலை டிரம்ப் அடுத்த இடியை இறக்கினார். அதாவது 70+ நாடுகளுக்கு ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இது உலக வர்த்தகத்தைக் குழப்பத்தில் தள்ளும் என்று வல்லுநர்கள் எச்சரித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் டிரம்ப் இதேபோல ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தபோதுதான் தங்கம் உச்சம் தொட்டது. ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாகவே இருக்கிறது.

தங்கம் விலை சரிகிறது
சர்வதேச அரங்கில் இவ்வளவு நடந்தும் கூட தங்கம் விலை ஏறவில்லை. மாறாகக் குறைகிறது..! சர்வதேச சந்தையிலும் கூட தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3300 டாலருக்கு கீழ் போனது. கடந்த இரு மாதங்களில் தங்கம் விலை 3300 டாலருக்கு கீழ் செல்வது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு தங்கம் விலை 3300க்கு கீழ் போனபோது கூட சீக்கிரம் மேலே வந்துவிட்டது. ஆனால், இந்த முறை 3300 டாலருக்கு மேல் வர முடியாமல் திணறி வருகிறது. இப்போது (வெள்ளி மாலை 6.45) 3,290 டாலரில் தான் இருக்கிறது.
காரணம் என்ன
இதற்குப் பிரதான காரணமே அமெரிக்க ஃபெட் (நம்ம ஊர் ரிசர்வ் வங்கி போல) எடுத்த முடிவு தான். கடந்த ஜூலை 30ம் தேதி இரவு நடந்த மீட்டிங்கில் அமெரிக்க மத்திய வங்கி வட்டியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட்டி 4.25%-4.50% ரேஞ்சில் தொடரும் என ஜெரோம் பவல் அறிவித்தார். எல்லாவற்றையும் விட மேலாக டிரம்ப் வரிகளால் ஏற்பட்ட சிக்கல், பொருளாதார குழப்பம் காரணமாக விலைவாசி உயர்ந்தால் வட்டியை உயர்த்த உள்ளதாகவும் கூறினார். இதுவே மிக முக்கியமான பாயிண்டு! இதன் காரணமாகவே தங்கம் விலை சரிந்து வருகிறது.
எப்போதுமே அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தினால் தங்கம் விலை குறையும். அதுவே இப்போதும் நடக்கிறது. இதனால் அடுத்த சில வாரங்கள் தங்கம் விலை குறையும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications