பயங்கரமாக சரிந்த தங்கம் விலை! அந்த பக்கம் அமெரிக்காவின் ஓவர்நைட் முடிவு! இன்னும் எவ்வளவு குறையும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க மத்திய வங்கி நேற்றிரவு நடந்த கூட்டத்தில் தனது வட்டி விகிதத்தைக் குறைத்தது. பொதுவாக இதுபோன்ற வட்டி விகிதம் குறைக்கப்படும் போது தங்கம் விலை உயரவே செய்யும். ஆனால், அதற்கு நேர்மாறாகத் தங்கம் விலை இன்று கணிசமாகக் குறைந்தது. தங்கம் விலை இப்படித் திடீரெனக் குறைய என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.

அமெரிக்கா மத்திய வங்கியின் இரண்டு நாள் கூட்டம் நேற்று முடிவடைந்தது. அமெரிக்க மத்திய வங்கி இந்தாண்டு தொடக்கம் முதலே வட்டி விகிதத்தை மாற்றாமல் இருந்தது. அமெரிக்காவில் கடந்த வாரம் வெளியான வேலைவாய்ப்பு ரிப்போர்ட் சிறப்பாக இல்லாத சூழலில், வட்டி விகிதத்தைக் குறைத்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.

Why Gold Rate is falling Despite US Fed Rate Cut last night and how long it ll will continue

அமெரிக்கா எடுத்த முடிவு

இந்தச் சூழலில் தான் அமெரிக்க மத்திய வங்கி நேற்று வட்டி விகிதத்தைக் குறைத்தது. இந்தாண்டு அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைப்பது இதுவே முதல்முறையாகும். இந்தாண்டு மேலும் இரண்டு முறை வட்டி குறைப்பு செய்யப்படலாம் என்றும் அமெரிக்க மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வட்டி குறைப்பு அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக அமெரிக்க மத்திய வங்கி வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்க வேண்டும். அதன்படி இன்று தங்கம் விலை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ.81,760-க்கு விற்பனையானது. அதேபோல ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 10,220-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காரணங்கள்

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "இந்த முறை வட்டி குறைப்பு வரும் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும். இந்த முறை வட்டி குறைப்பு 0.5%ஆக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், 0.25% மட்டுமே குறைக்கப்பட்டது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாகவே இருந்தது. இதன் காரணமாகவே தங்கம் விலை குறைந்துள்ளது" என்றார்.

அதேபோல 2026க்கான கொள்கை நிலைப்பாடு அவ்வளவு சாதகமாக இல்லை. அதாவது அடுத்த ஆண்டு ஒரே ஒரு வட்டி விகிதக் குறைப்பு மட்டுமே இருக்கும் எனச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த இரண்டுமே தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை குறைந்தது

அதாவது முன்பே சொன்னது போல இந்த முறை வட்டி குறைப்பு இருக்கும் எனத் தெரிந்ததால் ஏற்கனவே தங்கம் விலையைத் தாறுமாறாக உயர்த்திவிட்டனர். புவிசார் அரசியல் சூழலும் சேர தங்கம் விலை உச்சத்திற்குப் போனது. ஆனால், வட்டி விகிதமும் எதிர்பார்த்த அளவுக்குக் குறைக்கப்படவில்லை. மேலும், கொள்கை குறிப்பிலும் திருப்தி இல்லாததால் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

இது தொடருமா?

இது தொடர்பாக மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் கூறுகையில், "இது மட்டுமில்லை ஒரேயடியாக ஏறும்போது சில முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கக் கணிசமான முதலீடுகளை விற்று வெளியே எடுப்பார்கள். அதுபோல இப்போது சில முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்திருக்கலாம். அதுவும் கூட தங்கம் விலை குறையக் காரணமாக இருக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போதைய விலையில் இருந்து தங்கம் விலை 5 முதல் 7% வரை குறையலாம் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் டாலர் மதிப்பு, புவிசார் அரசியல் எனப் பல காரணங்கள் இருப்பதால் தங்கம் விலை அடுத்து என்னவாகும் என்பதை நாம் கவனமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+