ஆளுநர் ரவி பேசும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டது ஏன்? சபாநாயகர் அப்பாவு கொடுத்த மிக முக்கிய விளக்கம்
சென்னை: ஆளுநர் ரவி இன்று சட்டசபை கூட்டத்தொடரில் தனது உரையை வாசிக்காமல் வெளியேறிய நிலையில், ஆளுநர் பேசும்போது அவரது மைக் அணைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இதற்கிடையே அவையில் என்ன நடந்தது... கவர்னர் மைக் ஆஃப் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாகச் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பித்தது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக இருந்தது. அதன்படி காலை 9.30 மணிக்கு அவைக்கு வந்த கவர்னர் ரவிக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவை தொடங்கவிருந்தது. இருப்பினும், கவர்னர் ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார்.

ஆளுநர் வெளியேறினார்
தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு வெளியேறினார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கத்தையும் அளித்திருந்தது. அதில் அரசு தயாரித்துக் கொடுத்திருந்த உரையில், பொய்யான தகவல்கள் இருந்ததாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும், ஆளுநர் பேசுவதைத் தடுக்கும் வகையில் மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு இது தொடர்பாக விளக்கமளித்தார்.
அலுவல் ஆய்வு கூட்டம்
சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, தமிழகச் சட்டசபை கூட்டத் தொடர் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார். நாளைய தினம் 21ம் தேதி அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்படும். அதைத் தொடர்ந்து 22, 23- ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து 24ம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பார்.
அப்பாவு விளக்கம்
மேலும், ஆளுநர் இன்று தனது உரையை வாசிக்காமல் சென்றது தொடர்பாகவும் சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். சபை மரபு, சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் பேசுகிறோம் என்ற அப்பாவு, அரசின் குறைகளைச் சொல்ல ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை என்றும் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டு அவர் இதை எல்லாம் பேசலாம் என்றும் தெரிவித்தார். மேலும், ஆளுநர் என்பவர் அரசியலமைப்பின் பிரதிநிதி, சபையின் மாண்பை அவர் மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆளுநர் பேசும்போது அவரது மைக் அணைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு அது தொடர்பாகவும் விளக்கமளித்தார். ஆளுநர் தனது பணியைத் தாண்டி, அவையில் பேசுவது மரபு இல்லை என்ற அப்பாவு, அப்படித் தாண்டிப் பேசும்போது தான் தலையிட வேண்டி இருக்கிறது என்றார்.
மைக் ஆஃப் செய்யப்பட்டது ஏன்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "சபாநாயகர் என்ற முறையில் நான் பேசும்போது, சபாநாயகர் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்பதற்காக அவையில் இருக்கும் மற்ற மைக்குகள் நிறுத்தப்படும்.. அப்படித் தான் ஆளுநர் மைக் நிறுத்தப்பட்டு இருக்கலாம். ஆளுநர் பேசும்போதும் எனது மைக் கூட நிறுத்தப்பட்டே இருந்தது. அதெல்லாம் மரபுதான்.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையை வாசிக்காமல் ஜனாதிபதி இதுபோல் நடந்து கொண்டால் அதை ஏற்பார்களா? சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைப்பது தான் மரபு.. அந்த மரபு என்றும் மாற்றப்படாது. யாருக்கும் பயந்து தமிழ்நாடு சட்டசபையின் மரபு மாற்றப்படாது" என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications