"கலர்" மாறி போச்சே.. ஆளுநர் ரவி போட்ட அந்த உத்தரவு.. அதிகாரிகள் அதிர்ச்சி.. அதிருப்தியில் பொதுமக்கள்
ஆளுநர் ரவி, ஊட்டி ராஜ்பவன் கட்டிட நிறத்தை மாற்றி உள்ளார்
சென்னை: தேர்தல் பரபரப்புகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு காரியத்தை செய்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.. இதனால் சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
முந்தைய ஆளுநர் போல, தற்போதைய ஆளுநர் ரவி இல்லை.. திமுக ஆட்சிக்கு வந்த நேரம்தான் இவரும் புதிதாக இங்கு பொறுப்பேற்றார்.
பதவியேற்றதில் இருந்தே ஒரே பரபரப்புதான்.. நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, திருப்பி அனுப்பியது முதல், தமிழகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சலசலப்பு
இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது.. ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகளின் திருமணம், ஊட்டியில் ராஜ்பவன் இல்லத்தில் நடந்தது.. இதற்காக, கடந்த 17ம் தேதியே ஊட்டி ராஜ்பவனுக்கு ஆளுநர் வந்து விட்டார். விருந்து உபச்சார விழாவுக்கு தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. திருமண விழாவிற்கு வருகை தரும் விருந்தினர்களை 4 நாட்கள் தங்க வைத்து உபசரிக்க, கூடுதலாக ஜிம்கானா கிளப் மற்றும் ஜெம் பார்க் நட்சத்திர ஓட்டல்கள் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ராஜ்பவன்
ஆளுநர் வருகையாலும், அவரது மகள் திருமணத்தின் காரணமாகவும், ஊட்டி ராஜ்பவன் மாளிகை, தாவரவியல் பூங்கா, ஊட்டியில் உள்ள ஓட்டல்கள் என ஊட்டி முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜ்பவன் கட்டிட கலரே மாறிவிட்டது.. ஊட்டியில் உள்ள இந்த ராஜ் பவன், 1876ம் ஆண்டு, டியூக் ஆஃப் பக்கிங்ஹாம் என்ற பிரிட்டிஷ் ஆளுநரால் உருவாக்கப்பட்டது...

பச்சை கலர்
அப்போது இந்த மாளிகைக்கு "கவர்மன்ட் அவுஸ் என்று பெயர்.. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறக, இந்த மாளிகை ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வருகிறது... இத்தனை வருட காலம், அதாவது பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே 145 வருடங்களாக, வெளிப்பக்க சுவர் பச்சை கலரில் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது.. ராஜ்பவன் கட்டடத்தின் பாதுகாப்பு கருதியே, தொடர்ந்து ஒரே வண்ணம் பின்பற்றப்பட்டு வந்தது.

திருமணம்
ஆனால், ஆளுநர் மகள் திருமணத்திற்காக, ராஜ்பவனின் பாரம்பரிய நிறத்தை மாற்றி பளிச்சென்று தெரியும் வெள்ளை கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.. இதை பார்த்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ஆளுநரின் உத்தரவுப்படியே ராஜ்பவனின் நிறம் மாற்றப்பட்டதாக சொல்கிறார்களாம்..

என்ன காரணம்?
ஊட்டியின் ராஜ்பவனின் அடையாளமே அந்த பச்சை கலர்தான்.. அதை ஏன் மாற்ற வேண்டும்? என்ற சர்ச்சை கிளம்பி உள்ளது.. இதுவரை எந்த ஆளுநர்களுமே இந்த நிறத்தை மாற்றாதபோது, தற்போதைய ஆளுநரின் செயல்பாடுகள் விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஒருவேளை திருமணம் முடிந்ததும் மீண்டும் அதே பச்சை கலர் பூசப்பட்டுவிடுமா அல்லது இதே வெண்மை கலரே நீடிக்குமா என்று தெரியவில்லை.
-
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு? -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications