ITR வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? IT ஊழியர்களை குறி வைக்கும் வரித்துறை.. என்ன காரணம்
சென்னை: அதிக வருமானம் ஈட்டும் ஐடி துறை ஊழியர்களை வருமான வரி துறை இந்த முறை தீவிரமாக சோதனை செய்யும் என்று கூறப்படுகிறது.
அதாவது வருடத்திற்கு 20 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் ஐடி துறை ஊழியர்கள் மீது வருமான வரித்துறை தீவிர சோதனைகளை மேற்கொள்ளும் என்று கூறப்ட்டு உள்ளது. பல ஐடி ஊழியர்கள் சிஏவை வைத்தே வருமான வரி ITR தாக்கல் செய்கிறார்கள்.
இதில் பலர் பொய்யான பான் கார்டு கொடுத்து வீட்டு வாடகை கணக்கு காட்டுகிறார்கள். இல்லாத லோன்களை இருப்பதாக காட்டுகிறார்கள். அதேபோல் பலர் முதலீடு செய்யாமலே.. அதாவது இன்சூரன்ஸ் போன்ற செலவுகளை செய்யாமலே அதை செய்ததாக கணக்கு காட்டுகிறார்கள்.
முக்கியமாக அதிக வருமான ஈட்டும் ஐடி ஊழியர்கள் அதிக அளவில் ரிட்டன் பெறுவதற்காக இப்படி செய்கிறார்கள். இதை தடுப்பதற்காக இந்த முறை அதிக வருமானம் ஈட்டும் ஐடி துறை ஊழியர்களை வருமான வரி துறை இந்த முறை தீவிரமாக சோதனை செய்யும் என்று கூறப்படுகிறது.
தீவிரமாக்கப்பட்ட விதிகள்
ஏற்கனவே வருமான வரி ITR பக்கத்தின் E Filling திறக்கப்பட்டு உள்ள நிலையில் வருமான வரி பிரிவின் ஒவ்வொரு பக்கமும் கடினமாக்கப்பட்டு உள்ளது.

வீட்டு லோன் தொடங்கி அனைத்து வகையான முதலீடுகளுக்கு நம்பர் கொடுக்க வேண்டும் என்று விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது கடந்த வருடங்கள் போல வெறுமனே முதலீடுகளை ஆதாரம் இல்லாமல் கொடுக்க முடியாது. நீங்கள் கணக்கு காட்டு முதலீடுகள் உண்மையில் மேற்கொள்ளப்பட்டதா என்று சோதனை செய்யப்படும்.
லோன் உள்ளதாக காட்டப்படும் கணக்குகள் முறையானதா என்று சோதனை செய்யப்படும். 1 லட்சத்திற்கு மேல் வீட்டு வாடகை இருக்கும் பட்சத்தில்.. நீங்கள் தரக்கூடிய பான் கார்டை வைத்து சோதனை செய்வார்கள். அதாவது நீங்கள் சொல்லும் வாடகைக்கு கணக்கு சரியானதா என்று சோதனை செய்வார்கள்.
வருமான வரி தாக்கல்
பழைய வருமான வரி முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது
உங்களின் சம்பளத்தின் முதல்
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்












Click it and Unblock the Notifications