திருநாவுக்கரசரை சந்தித்தேன்... ஆனா அரசியல் எதுவும் பேசவில்லை... நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
சென்னை: திருமாவளவன், திருநாவுக்கரசரை சந்தித்ததில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் இல்லத்துக்கு சென்றார். தமது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க ரஜினி அங்கு சென்றதாக தகவல் வெளியானது.

திருநாவுக்கரசரின் இல்லத்தில்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும் இருந்துள்ளார். மூவரும் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் குறித்து தமிழக அரசியலில் பலவாறாக பேசப்பட்டது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது, ஏதேச்சையாக நடைபெற்ற நிகழ்வு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந் நிலையில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரை ஏன் சந்தித்தேன் என்று
நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:திருநாவுக்கரசர் மூலம் தமது மகள் சவுந்தர்யாவுக்கு திருமணம் அமைந்தது. அதனால் அவருக்கு முதலில் அழைப்பு விடுத்தேன். திருநாவுக்கரசருடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications