சம்பவம் செய்த தமிழ்நாடு! ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்ய வந்தது ஏன்? கெஜ்ரிவால் சொன்ன விஷயம்!
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்திருக்கிறார். ஏன் ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்ய சென்னை வந்திருக்கிறார் என்பதை அவர் விளக்கியிருக்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்திருந்த 131-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை, தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து சண்டை செய்திருந்தது. இந்த மசோதா குறித்து தமிழக எம்பிக்கள் பேசியிருந்தது, நாடு முழுவதும் கவனம் பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு சென்னை வந்த அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல பணிகளையும் அவர்கள் முழுமையாகச் சிதைத்துவிட்டனர். அந்த கசப்பான அனுபவங்களை நான் இங்குள்ள மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திங்கள்கிழமையன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, அதில் நான் மக்களிடம் விரிவாகப் பேசுவேன். ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்.
ஸ்டாலின் எனது நண்பர், எனது சகோதரரை போன்றவர். இருப்பினும் நான் அவருக்காக பிரச்சாரம் செய்ய வந்திருக்க காரணம், அவர் தமிழ்நாட்டிற்கு செய்திருக்கும் பணிகள்தான்" என்று கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தி பிரச்சாரம்
மறுபுறம் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தாலும், இப்போது வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications