உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-க்கு வருமான வரி விலக்கு ஏன்.. சுமந்த் சி ராமன் பதில்
சென்னை: உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-க்கு வருமான வரி விலக்கு தரப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றால் அது பிசிசிஐ தான். அதாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான். இந்தியாவின் பெயரில் கிரிக்கெட் விளையாடும் இந்த அமைப்பு அரசு அமைப்பு அல்ல. இது தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆகும். அதேநேரம் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் அமைப்பாக கருதப்படுவதால் பிசிசிஐக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டும் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வருமான வரி செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதுபற்றி கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறும் போது, "கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் அமைப்பு என்ற அடிப்படையில பிசிசிஐ வருமான வரி விலக்கு பெற்றுள்ளார்கள். வருமான வரி விலக்கு அளித்தது அரசு தான். அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் பிசிசிஐயில் இருப்பதால் யாரும் ஏதும் கேட்க முடியாது" என்று கூறினார்.
2023 ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்தும் பிசிசிஐ, ஐசிசி சார்பில் இந்திய அரசுக்கு 963 கோடி ரூபாய் வரியை பிசிசிஐ நிச்சயம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. ஐசிசி பொதுவாக உலகக் கோப்பை அட்டவணையை குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிடும். ஆனால் இந்த முறை இந்திய அரசாங்கத்திடம் இருந்து பிசிசிஐ தேவையான அனுமதிகளைப் பெறும் வரை அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான வரி விலக்கு பெறுவதில் உள்ள முக்கியமான சிக்கல்கள் தான் அதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
வரி விலக்கு விவகாரம் தொடர்பாக இந்திய அரசின் துல்லியமான நிலைப்பாட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்கு பிசிசிஐ விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனுக்கு மாற்றப்பட்டது. அதேநேரம் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடத்துவது என்று ஐசிசி அறிவித்திருந்தது. ஏற்கனவே 2014 இல் இந்தியா, பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகியவை வரி விலக்கு உள்ளிட்ட ஹோஸ்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. அந்த அடிப்படையில் இப்போதும் வரி விலக்கு இந்திய அரசு தரும் என்று ஐசிசி எதிர்பார்க்கிறது. ஆனால் இதுபற்றி இந்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இதனிடையே 2023 உலகக் கோப்பை தொடர்பான போட்டிகளை ESPNCricinfoவில் ஒளிபரப்பும் போது அதன் வருமானத்தில் 20% வரியை விதிப்போம் என்று ஏற்கனவே பிசிசிஐக்கு அரசு தெரிவித்திருந்தது.
2023 உலகக் கோப்பையில் இருந்து ஐசிசி எதிர்பார்க்கும் ஒளிபரப்பு வருவாய் 533.29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது 43,92 கோடிக்கு மேல் ஆகும்.












Click it and Unblock the Notifications