சிசிடிவியால் வந்த வினை.. திமுக போட்ட பிளான்.. உளவுத்துறையை வைத்து மோப்பம் பிடித்த பாஜக.. போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி.கேமரா அமைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இதனை மாநில அரசு செய்தாக வேண்டும். அந்த வகையில், இதற்கான டெண்டர் விடுவதற்கு தயாராக இருந்தது திமுக அரசு.

Why installing CCTV camers in election booths for Lok Sabha election become an issue between DMK and BJP?

சி.சி.டி.வி. கேமரா: வாக்குச்சாவடிகளில் அமைக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்களின் இயக்கத்தையும் கண்காணிப்பையும் கோட்டையில் உருவாக்கப்படும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகள் மட்டும்தான் பார்க்க முடியும் ; அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இது இருக்க வேண்டும்.

அந்த நிலையில், தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பது போல, அறிவாலயத்தில் இருந்தபடியே கண்காணிக்கவும், சி.சி.டி.வி.காட்சிகளை பதிவு செய்யவும் ரகசியமாக அரசு தரப்பில் திட்டமிடப்படுவதாம். ஆனால் இதற்கு பின் நல்ல காரணம் ஒன்றும் உள்ளது.

அதன்படி சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் துணையோடு தேர்தலில் ஓபனாக பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதால் தற்பாதுகாப்புக்காக தமிழக அரசு இந்த நடவடிக்கையில் இறங்க கூடும் என்றும், தனது உளவுத்துறை மூலம் அறிந்தது மத்திய அரசு.

தேர்தல் ஆணையம் டெண்டர்: உடனடியாக, தமிழகத்தில் தொடர்பு கொள்ள வேண்டியவர்களை தொடர்பு கொண்டு கடுமையாக உத்தரவிட, மாநில அரசு அறிவிக்கும் டெண்டரை நிறுத்தி வைக்க அரசை கேட்டுக்கொண்டுள்ளார்களாம். தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையமே டெண்டர் விட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திமுக வேகம்: லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதிமுக இன்னும் கூட்டணி எதையும் அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக பெரும்பாலும் கூட்டணியை 10 நாட்களில் இறுதி செய்துவிடும்.. பழைய கூட்டணியே இந்த முறை இந்தியா கூட்டணி என்ற பெயரில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8- தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மற்ற கட்சிகளுக்கு 1-2 இடங்களை மட்டுமே கொடுக்கலாம் என்ற திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக அறிவிப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அங்கே புதிய வேட்பாளர் களமிறங்க வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+