80% தங்கம் வாங்கினால்.. கூடவே 20% வெள்ளி வாங்குங்கள்.. அறிவுறுத்தும் வல்லுநர்கள்.. ஏன் தெரியுமா ?
சென்னை: இந்தியாவில் தங்கம் வாங்குபவர்கள் அத்துடன் சேர்த்து வெள்ளியும் வாங்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு அவர்கள் முக்கியமான சில காரணங்களை தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் தங்கள் முதலீடுகளைப் பாதுகாக்க, இந்தியாவில் பல முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை ஒருசேர வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தங்கம் பணம் தொடர்பான சொத்தாக செயல்பட்டு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் நாணய ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஒரு நிலையான முதலீடாகத் திகழ்கிறது.

ஆனால், வெள்ளி இரண்டு விதமான பங்கைக் கொண்டுள்ளது. இது தங்கம் போன்ற முதலீடாக இருப்பதுடன், மின்னணு சாதனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய ஆற்றல் போன்ற தொழில்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது வெள்ளி பணத்தை சார்ந்தது மட்டுமல்ல அது தொழிற்துறை சார்ந்ததும் கூட.
வெள்ளி பாதுகாப்பு
பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்போதும் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. வெள்ளி அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தாலும், தொழில்துறை தேவை அதிகரிக்கும்போது சிறப்பான லாபத்தை ஈட்ட முடியும். இதனால் இரண்டையும் கலந்து வாங்க வேண்டும். முதலீட்டுத் திட்டங்களில் அதிக தங்கம் மற்றும் குறைந்த வெள்ளி கொண்ட போர்ட்ஃபோலியோக்கள் காலப்போக்கில் சிறந்த பலனை அளிப்பதுடன், குறைந்த ஆபத்தையும் கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கலப்பு முதலீடுதான் சரியானது. அப்படி செய்யும் போது தங்கம் ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது, வெள்ளி கூடுதல் வளர்ச்சி வாய்ப்புகளைத் தருகிறது. பிஸிக்கல் தங்கம், வெள்ளியின் அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சேமிப்புச் சிக்கல்கள் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இப்போது தங்கம் மற்றும் வெள்ளி பரிமாற்ற வர்த்தக நிதிகள் (ETFs) மற்றும் பிற டிஜிட்டல் உலோகங்களை விரும்புகின்றனர்.
இந்த டிஜிட்டல் தயாரிப்புகள் வாங்குவதற்கு எளிதானவை, வெளிப்படையானவை மற்றும் சிறிய தொகையை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் ஏற்றவை. பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பொதுவாக பரிந்துரைக்கப்படும் கலவை சுமார் 60% முதல் 80% தங்கம் மற்றும் 20% முதல் 40% வெள்ளி ஆகும். அதாவது 80% தங்கம் வாங்கினால் கூடவே 20% வெள்ளி வாங்குவது சரியானது.
இந்தக் கலவை அவர்களின் சேமிப்பைப் பாதுகாப்பதற்கும், நீண்டகால தொழில்துறை தேவையால் பயனடைவதற்கும் ஒரு நடைமுறை வழி என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை ஒரு கிலோகிராம் ₹1.5 லட்சமாக உயர்ந்து, இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல், தங்கம் 10 கிராமுக்கு ₹1,19,500 ஆக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்தது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் வெள்ளையின விலை இரண்டு மடங்கு உயரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி மார்க்கெட்டில் வெள்ளியின் பொற்காலம் தற்போது தொடங்கியுள்ளது என கூறலாம். இந்த ஆண்டில் மட்டும் வெள்ளி விலைகள் 22% உயர்ந்துள்ளது, இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகும். இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் வெள்ளையின விலை இரண்டு மடங்கு உயரும் என்று ரிச் டாட் புவர் டார் புத்தகத்தின் எழுத்தாளர் பொருளாதார நிபுணர் ராபர்ட் கியோஸ்கி தெரிவித்துள்ளார். அதேபோல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2024-25 இன் படி, 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையும், அதே நேரத்தில் வெள்ளி விலை உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கையில் தங்கம் விலை குறையும், வெள்ளி விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத் தாது, துத்தநாகத்தின் விலை குறைவதால் உலோகங்கள் மற்றும் கனிமங்களின் விலைகள் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இப்போது நிலவும் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலை குறையும். இப்போது தற்காலிகமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையும் என்று பொருளாதார ஆய்வு 2024-25ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பொருட்களின் விலை 5.1 சதவிகிதத்தில் இருந்து 2026ல் 1.7 சதவிகிதமாக் குறையும். இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்.. அதில் தங்கத்தின் விலையும் குறையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. கடந்த 2005 நவம்பரில் 12 ஆயிரம் ரூபாய் இருந்த 1 கிலோ வெள்ளியின் விலை தற்போது 1 லட்சம் ரூபாய். அதிலும் கடந்த 5 வருடங்களில் வெள்ளியின் விலை ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் தங்கம் அளவிற்கு அல்லது தங்கத்தை விட வரும் நாட்களில் அதிக வேகமாக மதிப்பு உயரும் உலோகமாக வெள்ளி மாறி வருகிறது.












Click it and Unblock the Notifications