ஹோட்டல் ஹோட்டலா போய் சாப்பிட்டாரே.. Irfan's View சேனல் முடக்கம் ஏன்? .. என்ன செய்தார் இர்பான்?
சென்னை: பிரபல யூடியூபர் இர்பானின் சேனல் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து இணையதளத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
Recommended Video
இர்பான் சேனலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர், இர்பான் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். சென்னையை சேர்ந்தவர் முகமது இர்பான். இவர் ஆரம்பத்தில் ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த வேலையை ராஜினாமா செய்த இவர் யூடியூப் சேனலை தொடங்கினார். இர்பான்ஸ் வியூ என்பது அதன் பெயராகும். ஆரம்பத்தில் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள உணவகங்களுக்கு சென்று அங்கு ஸ்பெஷலான உணவுகளை சாப்பிட்டு பார்த்து சப்ஸ்கிரைபர்களுக்கு சொல்வார்.

ரெவ்யூ ஸ்டைல்
இவர் ரெவ்யூ செய்யும் ஸ்டைலுக்கே இவரை மக்கள் விரும்பினார்கள். ஏராளமான சப்ஸ்கிரைபர்கள் குவிந்தார்கள். ஒரு ஹோட்டலில் பிரபல உணவை அவர் சாப்பிட்டு வர்ணிக்கும் விதத்தை பார்த்தால் நமக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழும். அந்த அளவுக்கு அவரது வர்ணனை இருந்தது.

வீடியோ
மேலும் வீடியோவில் சகஜமாக ஜாலியாக சிரிச்சு பேசுவார். நகைச்சுவையாக பேசுவதாலும் இவரது ரெவ்யூவை பார்க்க மக்கள் யூடியூப்பில் குவிந்தார்கள். இதன் மூலம் இர்பானுக்கு வியூவர்கள் குவிந்தனர். அவருக்கு 3.06 மில்லியனுக்கு மேல் சப்ஸ்கிரைபர்கள் உள்ளன. இவர் இதுவரை டாடி ஆறுமுகத்தின் கடைக்கும் சென்று உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்துள்ளார்.

விஜய் சேதுபதி
அது போல் நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்று தனது தாய் சமைத்து கொடுத்த உணவை அவருடன் உண்டு மகிழ்ந்தார் இர்பான். இவர் 7 ஆண்டுகளாக உணவு ரெவ்யூ செய்து வருகிறார். பர்கர் குறித்து ரெவ்யூ செய்யும் போது அப்படியே பெரிய பர்கரை கடிக்கும் ஸ்டைல் எல்லாமே நன்றாக இருக்கும்.

மலேசியாவிலும் உணவு வேட்டை
இது வெளியூர், வெளிமாநிலங்கள் என உணவு ரெவ்யூ செய்த நிலையில் தற்போது வெளிநாடுகளான துபாய், ஹார்ஷா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று ரெவ்யூ செய்துள்ளார். சென்னையில் மெரினாவில் சுந்தரி அக்காவின் கடை தொடங்கிய பெரிய பெரிய பிரபல பைஃவ்ஸ்டார் ஹோட்டல் வரை அனைத்தையும் உண்டு மகிழ்ந்தவர்.

பிரியாணி
பிரியாணி, அசைவ உணவுகளை சாப்பிட்டு ரெவ்யூ செய்யும் போது அவர் சொல்வதை பார்க்கும் போது நாமே சாப்பிட்டது போன்ற ஒரு திருப்தி ஏற்படும். எப்போதும் அரை டிரவுசர் போட்டுக் கொண்டு சந்து பொந்து இண்டு இடுக்கில் உள்ள அனைத்து கடைகளையும் அலசிவிடுவார். இந்த நிலையில் அவர் உணவு விமர்சகருக்காக நிறைய விருதுகளை வாங்கியுள்ளார்.

யூடியூப் முடக்கம் யூடியூப் முடக்கம்
அண்மையில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் இவருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே எண்ணங்கள் சரியாக பொருந்தவில்லை, செட் ஆகவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டதாக இர்பானே தெரிவித்திருந்தார். வளர்ந்து வரும் சினிமா நடிகர்களுக்கு இணையாக பிரபலமடைந்த இர்பானின் யூடியூப் சேனல் நேற்றைய தினம் முடக்கப்பட்டுவிட்டது. இவர் விதிகளை மீறிவிட்டதால் முடக்கப்பட்டதாக தெரிகிறது. இதை இர்பானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். ஹோட்டல் ஹோட்டலாக போய் சாப்பிட்ட இர்பானின் சேனல் முடக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அவரது சப்ஸ்கிரைபர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இதே சேனல் திரும்பவும் கிடைக்குமா, இல்லை புதிய சேனலை தொடங்குவதா என்ற யோசனையில் இர்பான் இருந்து வருகிறார். இதுவரை 1500 க்கும் மேற்பட்ட வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications