பாஜக நிகழ்ச்சிகளில் தலைகாட்டாத நடிகை நமீதா! தொடர்ந்து ஆப்சென்ட்! பின்னணி என்ன?
சென்னை: தமிழக பாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ள நடிகை நமீதா கடந்த சில மாதங்களாகவே கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஆப்சென்ட் ஆகி வருகிறார்.
5 மாநில தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என எதிலுமே நடிகை நமீதா பாஜகவுக்காக தலைகாட்டவில்லை .
இதன் பின்னணி குறித்து நாம் விசாரித்ததில், இடையே ஏற்பட்ட உடல்நலக் குறைவும் இப்போது மும்பையில் ஓய்வில் இருப்பதும் தான் காரணமாக கூறப்பட்டது.

பாஜகவில் நடிகை
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்தபோது அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா. கட்சியில் சேர்ந்த புதிதில் பாஜக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்ற நடிகை நமீதா, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரமும் செய்தார். நடிகை நமீதா கட்சிப்பணிகளில் காட்டிய சுறுசுறுப்பு காரணமாக அவருக்கு தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

தேர்தல் பிரச்சாரம்
இந்தச் சூழலில் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக நிகழ்ச்சிகளில் நடிகை நமீதாவை அதிகம் காணமுடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரை உட்பட பாஜக நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனிடையே டிஜிட்டலில் சொந்த தயாரிப்பில் சில நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கிய அவர், அது தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்?
கட்சி நிகழ்ச்சிகளில் பிடிப்பின்றி திடீரென நடிகை நமீதா ஒதுங்கியதற்கான காரணம் குறித்து நாம் விசாரித்ததில், ஓரிரு மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டதாகவும் இதனால் தற்போது மும்பையில் ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. விரைவில் மீண்டும் அவர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இந்த விவகாரத்தில் வேறு எந்த காரணமும் இல்லை என கூறப்பட்டது.

சினிமா பிரபலங்கள்
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்த போது நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், என பல சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளதால் அது தொடர்பான முன்னெடுப்பு பணிகளை தமிழக பாஜக இப்போதே தொடங்கிவிட்டது கவனிக்கத்தக்கது.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications