4 நாள் ஆச்சே.. போட்டோவும் இல்லை, போஸ்ட்டும் இல்லை.. அண்ணாமலை அப்படியே சைலண்ட்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். அவர் லண்டன் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து இதுவரை எந்த விதமான போஸ்ட்டையும் செய்யவில்லை. அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்ள ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டு இருக்கிறது
அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில்.. அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போல எஸ்ஆர் சேகர், கனகசபாபதி, சக்கரவர்த்தி, ராம.சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்

அண்ணாமலை எங்கே: இதற்கான நியமனத்தில் அண்ணாமலை தலையீடு இருப்பதாக கூறப்பட்டாலும்.. அண்ணாமலை இது தொடர்பாக இதுவரை எந்த விதமான போஸ்ட்டையும் செய்யவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாட்களுக்கு முன் லண்டன் சென்றார். எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் சென்றார்.
அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் அவரை வரவேற்று யாரும் புகைப்படங்களை வெளியிடவில்லை. பாஜக அதிகாரபூர்வ பக்கமோ, அண்ணாமலையோ, இந்த பயணம் பற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை. சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை சென்றுள்ளார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.
குழப்பம்: இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலை இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அண்ணாமலை நேற்று முதல்நாள் வெளிநாடு செல்லும் முன்பும் கூட அதிமுகவை கடுமையாக தாக்கிவிட்டே சென்றார்.
எடப்பாடி குறித்து நான் விமர்சனம் வைத்ததில் தவறு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். நான் என்னுடைய ஸ்டைலில் பேசினேன். நான் என்னுடைய ஸ்டைலில் விமர்சனம் வைத்தேன். இதில் எந்த தவறும் இல்லை. பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரி. நான் அவரை தற்குறி என்று கூறியதில் தவறு இல்லை.
முன்னாள் அமைச்சர்கள் என்னை தற்குறி என்று கூறலாம். நான் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா? என்று போகிற போக்கில் அண்ணாமலை கேட்டுவிட்டு சென்றுள்ளார்.
தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அவர் தலைவர் பதவியில் இருந்தே கூட மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது தலைமை பதவி மாற்றம் தொடர்பான கேள்விக்கு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.
அதில்,.. பாஜகவில் அனைத்திற்கும் முறை இருக்கிறது. அண்ணா இன்னும் டைம் இருக்கு.. நான் ஒரு அடிப்படை தொண்டன்.. அதன்படியே செயல்படுவேன். கட்சி தலைமைதான் முடிவுகளை எடுக்கும். கட்சியின் வளர்ச்சிக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். அதற்காகவே .. அதை நோக்கியே செல்கிறோம், என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications