Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்கே விகே பாண்டியன்.. இங்கே ஜெயலலிதா.. ஒரே வாரத்தில் 2 சூடு போட்டுக்கொண்ட பாஜக.. மொத்தமா போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் பாஜகவிற்கு ஏற்படலாம். ஆனால் பாஜக கடந்த 1 வாரத்தில் செய்த சில விஷயங்கள் அந்த கட்சிக்கே எதிராக மாறி உள்ளது.

2024 லோக்சபா தேர்தலில் பாஜக மெஜாரிட்டி நம்பறேன் 272 இடங்களை வெல்ல தீவிரமாக முயற்சி வருகிறது. ஒருவேளை மெஜாரிட்டி தனியாக கிடைக்காத பட்சத்தில் பாஜக என்டிஏ கட்சிகளுடன் கூட்டணி வைத்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.

Lok Sabha elections 2024 2024 Narendra Modi annamalai

ஆனால் என்டிஏ கூட்டணி கட்சிகளும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் பழைய நட்பு கட்சிகளான அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் ஆட்சி அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுக ஒருவேளை சில எண்ணிக்கையிலான இடங்களை வெல்லும் பட்சத்தில் பாஜகவிற்கு அதிமுகவின் உதவி தேவைப்படலாம். ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் உதவியும் பாஜகவிற்கு தேவைப்படலாம்.

ஆனால் இரண்டிற்கும் பாஜக கடந்த 1 வாரத்தில் தானாக ஆப்பு வைத்துக்கொண்டு உள்ளது. இரண்டு மாநிலங்களில் பாஜக தேவையின்றி பகையை சம்பாதித்துக்கொண்டு உள்ளது.

தமிழ்நாடு பாஜக அதிமுக மோதல்: அதன்படி பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று, அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் பாஜக தமிழகத்தில் பெரிய இடத்தை பிடித்தது. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் வெற்றி கிடைக்கும் என்றும், இந்துத்துவா பற்றிய விவாதத்தில் அதிமுகவுடன் விவாதத்திற்கு பாஜக ரெடியாக உள்ளது

இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை. ஜெயலலிதா அவர்களும் இந்துத்துவாவாதி தான். ஜெயலலிதா இருந்திருந்தால் முதல் ஆளாக ராமர் கோவிலுக்கு போயிருப்பார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது, என்று அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு காரணமாக அதிமுக - பாஜக இடையே தமிழ்நாட்டில் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. அதிமுகவின் பகையை பாஜக வெகுவாக சம்பாதித்துக்கொண்டது. அதிமுகவை தேர்தல் ரிசல்ட் நெருங்கும் நேரத்தில் தேவையின்றி பாஜக பகைத்துக்கொண்டு உள்ளது.

ஒடிசா மோதல்: இங்கே அதிமுகவை பகைத்து பாஜக ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தை பகைத்துக்கொண்டு உள்ளது.

ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை பாஜகவின் டாப் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திடீரென தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்த பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகவாதியுமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்த மோடி, பூரி ஜெகநாதர் கோவிலின் ரத்தின பண்டரின் (புதையல்) சாவியை அவர் தமிழ்நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இங்கே இருக்க வேண்டிய சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது.

நமது சொந்த வீட்டின் சாவி கிடைக்காதபோது, ​​ஜெகநாதரை வேண்டிக்கொள்கிறோம், சாவியைக் கண்டுபிடிக்க அவரது வேண்டுதலை பெறுகிறோம்... ஆனால் அப்படிப்பட்ட கோவிலின் ரத்ன பண்டரின் சாவிகள் ஆறு ஆண்டுகளாக காணவில்லை. நாம் எங்கே போய் முறையிடுவது. ஸ்ரீ ரத்ன பண்டரின் சாவி தமிழகத்திற்குப் போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்?

விகே பாண்டியன் விமர்சனம்: இங்குள்ள விவசாயிகள் பிரச்சனையில் உள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கனிம வளங்கள் அதிகம் இருந்தும், இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்? ஒடிசாவின் நிலையைப் பார்த்து நான் வேதனையடைந்தேன்.

ஒடிசாவின் வருந்தத்தக்க நிலைமைக்கு யார் பொறுப்பு? சில ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் பிஜேடி அரசு உள்ளது. ஒரு சில ஊழல்வாதிகள் முதல்வர் அலுவலகம் மற்றும் இல்லத்தை ஆக்கிரமித்துள்ளனர். பிஜேடியின் சிறு தொழிலாளர்கள் இப்போது கோடீஸ்வரர்களாகிவிட்டனர், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்

எதிராக திரும்பும்; ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை விமர்சனம் செய்தது அந்த கட்சிக்கே எதிராக திரும்பும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எனப்படும் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே பாஜக, இந்தியா கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆகும். இரண்டுமே தெலுங்கா, ஆந்திராவில் முறையே வலிமையாக உள்ள கட்சிகள் ஆகும். இவை அணி சேராத கட்சிகள் என்பதால் இந்த கட்சிகள் கிங் மேக்கர்களாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

மெஜாரிட்டி: பாஜகவின் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். இதில் பிஜு ஜனதா தளம் இத்தனை காலம் பாஜகவின் அதிகாரபூர்வமற்ற கூட்டணி கட்சியாக இருந்தது. அதோடு லோக்சபா, ராஜ்ய சபாவில் பாஜகவின் திட்டங்களுக்கு வாக்களித்து வந்தது.

இப்போது வரும் தேர்தல் ரிப்போர்டுகள் சில தொங்கு நாடாளுமன்றம் உருவாக்கலாம் என்று கூறுவதால் இந்த அணி சேராத கட்சிகள் எங்கே செல்லும் என்பதை வைத்தே முடிவுகள் மாறும். இப்போது விகே பாண்டியனை சீண்டி பிஜு ஜனதா தளத்தையும் பாஜக மோசமாக சீண்டி உள்ளது.

வரலாறு என்ன?: அணி சேராத கட்சிகள் கொண்ட ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானாவில் நடந்த 2019 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 42 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும், YSR காங்கிரஸ் கட்சி (YSRCP) 22 இடங்களையும் பெற்றன.

கூட்டணி படி பார்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 49 இடங்களையும், இந்திய கூட்டணி 8 இடங்களையும், ஒய்எஸ்ஆர்சிபி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) போன்ற அணி சேராத கட்சிகள் எனப்படும் பிராந்திய கட்சிகள் கூட்டாக 39 இடங்களைப் பெற்றன.

ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா , ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 2019ல் NDA வெற்றி பெற்ற இடங்களில் 53% வாக்குகளைப் பெற்றது. இந்திய கூட்டணி 45% மற்றும் அணிசேராக் கட்சிகள் 48% வாக்குகளைப் பெற்றன. அணிசேராக் கட்சிகள் பெற்ற 8% வாக்குகள்தான் தொங்கு சட்டசபை உருவாகும் பட்சத்தில் முடிவுகளை தீர்மானிக்க போகின்றன.

அணிசேரா கட்சிகள் போட்டியிடும் இடங்கள்: 2019 ஆம் ஆண்டில், மேற்கண்ட மாநிலங்களில் பாஜக 10% வாக்கு சதவிகிததிற்கும் குறைவான வித்தியாசத்தில்தான் 14 இடங்களைப் பெற்றது, அதே நேரத்தில் 10% வாக்கு சதவிகிததிற்கும் அதிகமான வித்தியாசத்தில் 28 இடங்களை வென்றது.

அதே சமயம் அணிசேராக் கட்சிகள் இந்த 4ம் கட்டத்தில் கடந்த 39 இடங்களைப் பெற்றன, YSRCP (22), BJD (2), TMC (4), பாரத் ராஷ்டிர சமிதி அல்லது BRS (9), மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், அல்லது AIMIM (2) இடங்கள் பெற்றன. டிஎம்சி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் எந்த ஒப்பந்தத்திலும் இல்லாதது அதை அணிசேராது என்று வைத்துக்கொள்ளப்படும். தேர்தல் முடிந்த பின் இவர்கள் கூட்டணி வைக்கலாம்.

பாஜகவின் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாரதிய ராஷ்திரிய சமிதி, ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை ஆதரவு கொடுக்கும் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்து இந்த கட்சிகள்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க போகின்றன.

இதில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் எதிராக உள்ளது. தெலுங்கானா ஆட்சி மாற்றம் காரணமாக பிஆர்எஸ் காங்கிரசை கொஞ்சம் கூடுதலாக எதிர்க்கிறது. YSRCP பாஜகவுடன் கொஞ்சம் நட்பாக உள்ளது. பிஜு ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இப்போது பிஜு ஜனதா தளத்தை பாஜக பகைத்துக்கொண்டு உள்ளது. இது பாஜகவிற்கே எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+