"இது" மட்டும் வேணாம்.. திருமாவளவன் தலித்களின் நண்பனா? ஆமா, ஸ்டாலின் அங்கே போனாரா? யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிப்பூர் விவகாரம் குறித்து மேலிட பாஜக விவாதிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் எதிர்க்கட்சிகள் காத்து கிடக்கின்றன.. இதுகுறித்து பிரதமர் என்ன பேசப்போகிறார்? என்ற ஆர்வமும் எழுந்தபடியே உள்ளது.

மணிப்பூர் சம்பவம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றம்தான் முடங்குகிறது.
இதற்கு நடுவில், மேற்கு வங்கத்தில் 2 பெண்களின் ஆடைகளை கிழித்து அரைநிர்வாணப்படுத்தி பொதுமக்கள் முன்னிலையில் பெண்களே தாக்கிய சம்பவம் நடந்தது. இதுதொடர்பான வீடியோவும் வெளியானது..

Why is BJP not discussing Manipur issue and What does senior BJP leader H. Raja say

கொடுமைகள்: இதையடுத்து, மணிப்பூர் விவகாரம் குறித்து மட்டுமல்லாமல், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார் அனுராக் தாக்கூர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம்... வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தால், அதில் பிரச்னை இல்லை. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து மட்டுமல்லாமல், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் வாருங்கள் என்று அழைப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றன எதிர்க்கட்சிகள்.

விலைவாசி உயர்வு: இப்படியான போட்டிகள் நடந்து வரும்நிலையில், தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா ஒரு பேட்டி தந்துள்ளார்.. விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு, கோயில் இடிப்பு உள்ளிட்ட திமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேங்கை வயலுக்கு ஸ்டாலின் போனாரா? திருமாவளவன் இதுக்காக போராட்டம் நடத்தினாரா? ஆனால், இன்னைக்கு திருமாவளவன் சொல்றாரு, மணிப்பூர் விவகாரத்துக்கு பாராட்டம் நடத்த போவதாக சொல்கிறார். நீங்க தலித் மக்களின் நண்பன் அல்ல என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.. ஆனாலும் மோசடி பேர்வழி என்பது இன்னும் ஊர்ஜிதமாகும்.

மேற்கு வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணப்படுத்திய திரிணாமூல் குண்டர்கள், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இதை யாராவது கண்டித்தார்களா? அதை கண்டிக்கவில்லை என்றால், மணிப்பூர் சம்பவத்தையும் கண்டிக்காதீர்கள் என்றார்

பதிலடி தந்த எச்.ராஜா: அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மேற்குவங்க டிஜிபி சொல்லி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு எச்.ராஜா, அப்படித்தான் நிறைய பேர் சொல்றாங்க... ஆனால், நிஜமாகவே அங்கே அப்படி நடந்து இருக்கு. எங்க அகில இந்திய மகளிர் அணி தலைவி இதை பற்றி விவரமாக பத்திரிகைக்கு செய்தி கொடுத்திருக்காங்க என்றார் எச்.ராஜா.

எனினும், பாஜக மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து நிலவி வருகிறது.. மணிப்பூர் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினால், அது பாஜகவுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

இதுதான் காரணம்: காரணம், வன்முறை தொடங்கி 2 மாதங்கள் கடந்தும் ஏன் அமைதி திரும்பவில்லை? முகாம்களில் இருக்கும் சுமார் 50,000 பேரின் கதி என்ன? பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றவாளிகள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.? இப்படியான கேள்விகளுக்கு பாஜக பதில் சொல்லவேண்டியிருக்கும். அதனால்தர்ன, மணிப்பூர் பிரச்சனையைப் பற்றி தனி விவாதம் நடத்தவோ, பிரதமர் பேசவோ ஆளும் தரப்பு முன்வரவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+