அன்பில் மகேஷை ஏன் குறிவைக்கிறார்கள்? பாஜகவுக்கு செய்த 5 தவறுகள்.. ஜெயலலிதா சொன்னது என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும் அன்பில் மகேஷ் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். மாவட்டந்தோறும் மாடல் ஸ்கூல்கள் அதாவது மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,320 மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது அன்பில் மகேஷூக்கு கிடைத்த வெற்றி" என்று பாராட்டு தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் செந்தில்வேல்

தன்னாட்சி என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "அன்பில் மகேஷ் ஏன் குறிவைக்கப்படுகிறார்? மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை அவர் எதிர்த்தது முக்கியமான காரணம்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நேரடியாகவே அன்பில் மகேஷ் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

Anbil Mahesh

தேசியக் கல்விக் கொள்கையில் குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவரும் அம்சங்கள் இருப்பதாகக் கூறி, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியாகச் சொன்னார்.

அன்பில் மகேஷ் ஏன் குறிவைக்கப்படுகிறார்?

அந்த கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஜோதிடம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 6ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், 6 மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் சமூகத்துடன் தொடர்புடைய தொழில்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருவருடைய தந்தை என்ன தொழில் செய்கிறாரோ, அதையே அவருடைய குழந்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் பொருள். இதன் மூலம் குலத்தொழில் முறையை மீண்டும் கொண்டுவர முயற்சி நடக்கிறது என்று அன்பில் மகேஷ் எதிர்த்தார்.

இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு சொன்னபோதும், நிதிக்காகக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அன்பில் மகேஷ் உறுதியாக நின்றார். இதனால்தான் அவருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்படுகிறது..

அரசுப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றம்

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும் அன்பில் மகேஷ் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். மாவட்டந்தோறும் மாடல் ஸ்கூல்கள் அதாவத மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,320 மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது அன்பில் மகேஷூக்கு கிடைத்த வெற்றி.

அரசுப் பள்ளி மாணவர்களை ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளுக்குக் கல்விச் சுற்றுலாவுக்கும் அழைத்து சென்றார்கள். சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் பெரிய கல்வி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதுமட்டுமல்ல, மாணவர் சேர்க்கை அதிகரித்தது, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவோர் எண்ணிக்கை குறைந்தது, தேர்ச்சி விகிதமும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்ற மாபெரும் நிகழ்ச்சியையும் அன்பில் மகேஷ் நடத்திக்காட்டினார் சென்னையில்..!!!

"ஒரு மத யானை"

"ஒரு மத யானை" என்ற புத்தகத்தையும் அன்பில் மகேஷ் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. இதைப் பற்றி அப்போது பேசிய அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய புத்தகத்தை எழுதுவதற்குத் தனிப்பட்ட தைரியம் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அன்பில் மகேஷ் குறி வைக்கப்பட காரணம் அவர் செய்த தவறுகள்தான்.. ஆம், பாஜகவை அவர் எதிர்த்தது, புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தது, மாடல் பள்ளிகளை துவக்கியது, சமூகநீதியை முன்னெடுத்தது, அரசுப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்துக்காக செயல்பட்டது, இதெல்லாம்தான் அவர் செய்த தவறுகளாக பாஜக கருதுகிறது..

ஜெயலலிதா சொன்ன குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் திமுக மீது மேம்பால ஊழல் சுமத்தப்பட்டு, கலைஞரையும், ஸ்டாலினையும் நள்ளிரவில் கைது செய்தார்கள்.. ஆனால், ஊழல் செய்து கட்டியதாக சொன்ன அந்த மேம்பாலம் இன்னமும் கம்பீரமாக நிற்கிறது.. அந்த மேம்பாலத்தில்தான் ஜெயலலிதாவும் சென்றார்.. ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலமும் சென்றது..

இப்படி பல மேம்பாலங்கள் கம்பீரமாக நிற்கின்றன. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் இன்று கம்பீரமாக நிற்கிறார். ஆனால் குற்றச்சாட்டு சொன்னவர்கள் எல்லாம் காலமாகி போனார்கள். அதேபோல் அன்பில் மகேஷ் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் காலப்போக்கில் காணாமல் போய்விடும்.. அவரது சாதனைகளே நிலைத்து நிற்கும்" என்றெல்லாம் செந்தில் வேல் அந்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+