கன்னியாகுமரி பிரேமா.. காலையிலிருந்தே கணவர் காத்திருந்தது இதுக்குதானா? ஒரே நொடியில் அலறவிட்ட தக்கலை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், விவாகரத்து வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த மனைவியை, கணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து வரும் குற்றச் சம்பவங்கள், தவெக அரசுக்கு அரசியல் ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. என்ன நடந்தது தக்கலை கோர்ட் பகுதியில்?

கன்னியாகுமரி மாவட்டம், மேக்காமண்டபம் ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ் (35). கூலித் தொழிலாளி. இவருக்கும் பொன்மனை கிராமத்தைச் சேர்ந்த ஜெர்லின் பிரேமா (31) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

Kanyakumari Wife

கன்னியாகுமரி தம்பதி

ஜெர்லின் பிரேமா ஒரு கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த ஜெர்லின் பிரேமா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அத்துடன் நில்லாமல், விவாகரத்து கேட்டு, தக்கலை குடும்ப நல நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் மனைவியுடன் வாழ நினைத்த வின்சென்ட் ராஜ் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.. இதற்காக ஜெர்லின் பிரேமா நீதிமன்றத்தில் ஆஜராக சென்றார். அப்போது நீதிமன்றம் எதிரே உள்ள சாலையில் காத்திருந்த வின்சென்ட் ராஜ், மனைவியை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க முயன்ற வழக்கறிஞர்களையும் அவர் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

பிரேமாவின் தலை, கை, கால்கள்

இதையடுத்து அங்கிருந்து தப்பியோட முயன்ற அவரை, அங்கிருந்த பொதுமக்களும் வழக்கறிஞர்களும் இணைந்து சாதுரியமாக மடக்கிப் பிடித்து தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். பட்டப்பகலில் கோர்ட் எதிரே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ஜெர்லின் பிரேமாவின் தலை, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை பொதுமக்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். பின்னர் அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான வின்சென்ட் ராஜ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுவன் கொலை தொடர்பான வழக்கும் அவர் மீது இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் எகிறும் கிரைம் ரேட்

தமிழகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் மட்டும் 7 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலையில்கூட, தேனி மாவட்டத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தையும் சுட்டிக்காட்டி, இது தவெக அரசின் கையாலாகாத் தன்மை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

நேற்றைய தினம் இதே கன்னியாகுமரி மாவட்டத்தில், தாலி கட்டிய கணவரை, தூங்கும்போது கட்டையால் அடித்து கொன்றுவிட்டார் தவெக பெண் நிர்வாகி.. இன்றைய தினமும் பட்டப்பகலில் அரிவாள் வெட்டு நடந்துள்ளது.. விரைவில் தேர்தல் களம் சூடுபிடிக்க உள்ள நிலையில், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தவெக அரசுக்கு அரசியல் ரீதியாக தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+