புழலில் அன்பில் மகேஷ்! சப்பாத்தி முதல் சிக்கன் வரை! முதல் வகுப்பு கைதிகளுக்கான வசதிகள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ 100 கோடி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், புழல் சிறையில் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சாதாரண சிறை கைதிகளை காட்டிலும் குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படும்.

சிறை சட்டங்கள், விதிகளின்படி சிறைகளில் கைதிகளுக்கு அவர்களது கல்வித் தகுதி, சமூக அந்தஸ்து, குற்றத்தின் தன்மை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் முதல் வகுப்பு வழங்கப்படும்.

Anbil Mahesh

எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நீதிபதிகள், உயர் பதவியில் இருந்த அதிகாரிகள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், அதிகளவு வருமான வரி செலுத்துபவர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க ரூ 100 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்றைய தினம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் வேப்பரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலவலகத்திற்கு அன்பில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அன்பில் மகேஷ் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டபடி அவர் முன்னாள் அமைச்சர், எம்சிஏ பட்டதாரி. இதன் அடிப்படையில் அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். வழக்கமான உணவுடன் கூடுதலாக சப்பாத்தி, வாரத்தில் 3 நாட்கள் சிக்கன் கொடுக்கப்படும். சாதாரண கைதிகளை விட அதிக அளவில் பால், தேநீர் வழங்கப்படும்.

தனி அறை, கட்டில், மெத்தை, மின்விசிறி, நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதிகள் இருக்கும். நாளிதழ்கள், தொலைக்காட்சி, கொசுவலை உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கிடைக்கும். சிறைக் கண்காணிப்பாளர் அனுமதியுடன் வெளியில் இருந்து ஹாட் பாக்ஸ், தட்டு பயன்படுத்த அனுமதிக்கப்படும். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரத்யேக மருத்துவ பரிசோதனை வசதிகளும் கிடைக்கும்.

சாதாரண கைதிகளுடன் அடைக்கப்படாமல் காற்றோட்டமான தனி அறை வழங்கப்படும். சொந்த செலவில் உணவை வாங்கிக் கொள்ளலாம். சாதாரண கைதிகளை விட அதிகமான முறை உறவினர்கள், வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்படும். எனவே இந்த அத்தனை வசதிகளும் அன்பில் மகேஷுக்கு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+