திமுகவை மட்டுமே வலுவாக பாஜக டார்க்கெட் செய்வது ஏன்? பின்னணியில் உள்ள மேஜர் காரணம்
சென்னை: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எந்த அளவிற்கு விமர்சனம் செய்யப்பட்டது என்பதை விட, திமுக எந்த அளவிற்கு பாஜகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்பதை கேட்டால் நிச்சயம் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது அமைச்சரகள் ஸ்மிருதி இரானி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் என நீண்டு கடைசியில் பிரதமர் மோடி வரை வந்துள்ளது.
பாஜகவிற்கு மற்ற மாநிலங்கள் எந்த அளவிற்கு சவாலாக இருக்கும் என்பதை கண்டிப்பாக கூறிவிட முடியாது. ஆனால் நிச்சயம் தமிழ்நாடு கடும் சவாலாகவே இருக்கிறது. இதற்கு காரணம் இங்கு இதுவரை ஆட்சியில் இருந்து கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தான். அவர்கள் பாஜகவை வளரவே விடவில்லை.

பிரதமர் மோடி முதல்முறையாக 2014 தேர்தலில் வெற்றி பெற்ற போது, தமிழ்நாட்டில் மொத்தமாக 37 இடங்களில் அதிமுகவே (தனித்து போட்டியிட்டு) பெற்றி பெற்றது. வெறும் 2 இடங்களில் தான் பாஜக கூட்டணி வென்றது. திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா அப்போது எழுப்பிய முழக்கம் மோடியா அல்லது இந்த லேடியா என்பதை நிச்சயம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
ஆனால் 2019 தேர்தலில் மொத்தமாக திமுக கூட்டணி மொத்தமாக வென்றது. ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக வென்றது. பாஜக எங்குமே வெற்றி பெறவில்லை. மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சியை பிடித்த பாஜகவால், அதுவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தலை சந்தித்தும் இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் தமிழ்நாட்டில் படுதோல்வியைத்தான் சந்திக்க முடிந்தது.
இதுதான் பாஜகவிற்கு திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று இலக்கை கொண்டு வந்துள்ளது. இது ஒருபுறம் எனில் தேசிய ஊடகங்கள் எடுத்த சர்வே கூட திமுக கூட்டணி தான் 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெல்லும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திமுகவை பாஜக டார்கெட் செய்வது கடந்த சில மாதங்களில் அதிகமாகி உள்ளது.
இதுஒருபுறம் எனில், காங்கிரஸ் கட்சிக்கு பக்கபலமாக இருப்பது திமுக மட்டுமே.. மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்ததில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ஆர்ஜேடி, டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி,. இதுதவிர இடதுசாரிகள் ஆகியவை காங்கிரஸ் பின்னால் அணி திரள ஸ்டாலின் தலைமையிலான திமுக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதுவும் திமுக மீதான கோபத்தை பாஜகவிற்கு அதிகப்படுத்தியதாம்.
2019 போல் 2024 நாடாளுமன்ற தேர்தல் நிச்சயம் இருக்காது. எதிர்க்கட்சிகள் பல ஓரணியில் திரண்டு உள்ளன. கிட்டத்தட்ட 26 கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. இதனால் காங்கிரஸை தாண்டி திமுகவையும் டார்கெட் செய்து பாஜக கடும் பதிலடி கொடுத்து வருகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் விவாதத்தில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி வரை பாஜகவின் அத்தனை மூத்த தலைவர்களும் திமுகவை சரமாரியாக அட்டாக் செய்துள்ளனர். ராகுல் காந்தியைகூட இந்த அளவிற்கு அவர்கள் விமர்சிக்கவில்லை. திமுக எம்பிக்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் பாஜக கடுமையாக பதிலடி கொடுத்தது.
இன்று நிர்மலா சீதாராமன் உச்சகட்டமாக தமிழிலேயே பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடி, திமுக அமைச்சர் எவ வேலுவின் பேச்சை குறிப்பிட்டு பதிலடி கொடுத்தார். கச்சத்தீவு முதல் பாரத மாதா சிலை வரை பல விஷயங்களை பேசினார். அடுத்தடுத்து பாஜகவின் இலக்கில் திமுக சிக்கி இருப்பதையே இந்த பேச்சுக்கள் காட்டுகிறது.
இதற்கு முக்கிய காரணம், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் கடுமையாக பாஜகவை விமர்சிப்பதால் அந்த கட்சி எம்பிக்கள் பதிலுக்கு இறங்கி அடித்து பதிலடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024 தேர்தலில் தமிழகத்தில் திமுகவிற்கு கடும் சவால் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக வலுவான கூட்டணியை அமைக்கவும் ஆயத்தமாகி வருகிறது. மேலும் ஊழல் வழக்கில் சிக்கி உள்ள திமுக அமைச்சர்கள் பலரும் விரைவில் இலக்கு ஆவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications