திருமணத்துக்கு தங்கம் வாங்க போறீங்களா? கூடவே குண்டுமணி வெள்ளியாவது வாங்கி போடுங்க.. முக்கியம்!
சென்னை: உலக அளவில் தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது. முக்கியமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் தற்போது சரிய தொடங்கி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வெள்ளி இன்னொரு பாதுகாப்பான முதலீடாக மாறி உள்ளது.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,540 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,745 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,245 ஆகவும் உள்ளது. 10 கிராம் தங்கம் 95,400 ஆகும். இது 1 லட்சத்தை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹110 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,10,000 ஆகவும் உள்ளது.

தங்கம் விலை குறையும்
உதாரணமாக நீங்கள் திருமணத்திற்கு தங்கம் வாங்கினால் கூடவே வெள்ளி வாங்குவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிதிச் சேவை நிறுவனமான மார்னிங்ஸ்டாரின் பொருளாதார நிபுணர் ஜான் மில்ஸ், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1,820 ஆகக் குறையும் என்று கணித்துள்ளார், இது அவுன்ஸ் ஒன்றுக்கு $3,080 என்ற தற்போதைய நிலையில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு குறைவு. இது கிட்டத்தட்ட 38-40% சரிவைக் குறிக்கும், இது தங்கச் சந்தையை கணிசமாக பாதிக்கும். இப்போது தங்கம் விலை ஏறினாலும் இனி ஏறுவதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதால் இனி குறையவே தொடங்கும் என்று கூறி உள்ளார்.
வெள்ளி விலை உயரும் - அரசு அறிக்கை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2024-25 இன் படி, 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை குறையும், அதே நேரத்தில் வெள்ளி விலை உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கையில் தங்கம் விலை குறையும், வெள்ளி விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத் தாது, துத்தநாகத்தின் விலை குறைவதால் உலோகங்கள் மற்றும் கனிமங்களின் விலைகள் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இப்போது நிலவும் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலை குறையும். இப்போது தற்காலிகமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையும் என்று பொருளாதார ஆய்வு 2024-25ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பொருட்களின் விலை 5.1 சதவிகிதத்தில் இருந்து 2026ல் 1.7 சதவிகிதமாக குறையும். இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்.. அதில் தங்கத்தின் விலையும் குறையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளி முக்கியம் குமாரே
Rich Dad Poor Dad எழுத்தாளர் Robert Kiyosaki உலக அளவில் வெள்ளி விலை இந்த ஆண்டு இரட்டிப்பாகும் என்று கூறி உள்ளார். வெள்ளியின் வலுவான தேவை மற்றும் குறைந்த விநியோகம் காரணமாக இதன் மதிப்பு இரண்டு மடங்கு உயரப்போகிறது.
வெள்ளியின் தற்போதைய விலை ஒரு அவுன்ஸ் $34. இந்த ஆண்டு வெள்ளி 2 மடங்கு உயர்ந்து ஒரு அவுன்ஸ் $70 ஆக இருக்கும் என்று நான் கணிக்கிறேன், என்று அவர் கூறி உள்ளார். ஏற்கனவே இந்தியாவில் 1 கிலோ வெள்ளியின் விலை 1 லட்சம் ரூபாயை தாண்டி உள்ளது. சைக்காலஜி மார்க் என்று அழைக்கப்படும் 1 லட்சம் ரூபாயை தொட்டதன் மூலம் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. கடந்த 2005 நவம்பரில் 12 ஆயிரம் ரூபாய் இருந்த 1 கிலோ வெள்ளியின் விலை தற்போது 1 லட்சம் ரூபாய். அதிலும் கடந்த 5 வருடங்களில் வெள்ளியின் விலை ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் தங்கம் அளவிற்கு அல்லது தங்கத்தை விட வரும் நாட்களில் அதிக வேகமாக மதிப்பு உயரும் உலோகமாக வெள்ளி மாறி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications