ஹண்ட் ஃபார் ஹைட்ரஜன்.. நிலவில் மிகமுக்கிய பொருளை தேடும் சந்திரயான் 3.. பரபரப்பு காரணம்? திக்திக்
சென்னை: நிலவில் பல்வேறு தனிமங்கள் மற்றும் கனிமங்களை கண்டுபிடித்து வரும் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் அங்கே ஹைட்ரஜனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
நிலவின் மீது சந்திரயான் 3 அடுத்தடுத்து கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. விக்ரம் லேண்டரில் இருந்து சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது. இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி நிலவில் இருக்கும் மணல் பரப்பு, உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்தவில்லை. அதேபோல் இங்கே வெப்பம் வேறு வேறாக இருக்கிறது. அதாவது ஒரே வெப்பம் இல்லை. வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.
கனிமங்கள்: இன்னொரு பக்கம் விக்ரம் லேண்டரின் லேசர் மூலம் இயங்கும் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப், நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மேற்பரப்பில் கந்தகம் அதாவது சல்பர் இருப்பதை கண்டுபிடித்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
அங்கே "முதற்கட்ட பகுப்பாய்வு, மூலம், சந்திர மேற்பரப்பில் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகியவற்றின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது . மேலும் அளவீடுகள் செய்ததில் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஹைட்ரஜன் இருப்பு குறித்து முழுமையான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது" என்று இஸ்ரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹைட்ரஜன்: இந்த நிலையில்தான் நிலவில் பல்வேறு தனிமங்கள் மற்றும் கனிமங்களை கண்டுபிடித்து வரும் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் அங்கே ஹைட்ரஜனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஹைட்ரஜனை சூடுபடுத்தும் பட்சத்தில் அவை தண்ணீராக மாறும்.
இது நிலவில் தண்ணீர் இருப்பை உறுதி செய்ய உதவும். அதேபோல் எரிபொருளாகவும் இதை பயன்படுத்த முடியும். சேமிப்பு களங்களில் பயன்படுத்த ஹைட்ரஜன் தேவை. அதேபோல் பல்வேறு வேதியியல் ஆராய்ச்சிகள், அமைப்புகள், கருவிகளில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
இதன் காரணமாக தற்போது ஹைட்ரஜன் இருப்பை தேடி சந்திரயான் 3 சென்று கொண்டு இருக்கிறது. நிலவில் தண்ணீர் இருப்பதை ஏற்கனவே சந்திரயான் 1 கண்டுபிடித்தது. தற்போது தென் பகுதியில் உள்ள வெப்ப நிலை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உள்ளே தண்ணீர் ஐஸ் ஆக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் உள்ளே இருக்கும் ஐஸ் வெளியே வந்தால் வெப்பநிலை காரணமாக ஐஸ் உருகி தண்ணீர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இது நிலவில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய , அங்கே ஆறுகளை உருவாக்க வழி வகுக்கும். இது மனித குலத்தின் மாற்றத்திற்கு காரணமாக அமையும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications