50 வருடம் ஆச்சாம்! வழக்கத்துக்கு மாறா.. ஜீப்பை எடுத்த "தலைவர்".. பேச்சை கேட்டதும் நெகிழ்ந்த முதல்வர்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நீலகிரியில் ஜீப் பயணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது. ராணுவ அதிகாரியுடன் அவர் நீண்ட நேரம் இந்த பயணத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின் தற்போது ஊட்டிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில், நீலகிரி மாவட்டத்தில் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் துவங்கப்பட்டு. மொத்தம் 20 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நேற்று முதல்வர் ஸ்டாலின் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

ஊட்டி
பின்னர் ஊட்டி உருவாக காரணமாக இருந்த ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். அதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார். இந்த நிலையில்தான் வெலிங்டனில் போர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன்பின் வெலிங்டனில் உள்ள ராணுவ தலைமை பயிற்சிக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

முதல்வர் ஊட்டி
இந்தியாவில் உள்ள முக்கியமான ராணுவ கல்வி நிறுவனங்களில் வெலிங்டன் ராணுவ கல்லூரியும் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் முப்படை அதிகாரிகள், மாணவர்கள் பலருக்கும் பல விதமான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏன் இந்தியாவின் நட்பு நாடுகளில் இருந்தும் கூட இங்கு வந்து பலர் பயிற்சி பெற்று செல்கிறார்கள். இங்குதான் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஸ்டாலின் லெப்டினன்ட் ஜென்ரல்
அங்கு எப்படி பயிற்சி வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். நேற்று இந்த பயணத்தின் போது சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் வந்ததும் அவரை கல்லூரி தலைவர் லெப்டினன்ட் ஜென்ரல் எஸ் மோகன் வரவேற்றார். அவர் தமிழர். சக ராணுவ அதிகாரிகள் சிலரிடம் வேறு மொழிகளில் பேசிக்கொண்டு இருந்தவர்.. முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் சரளமாக தமிழில் பேசினார்.

நெகிழ்ச்சி
இவரை முதல்வர் நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தார். அதன்பின் முதல்வர் ஸ்டாலினை இவரே ஜீப்பில் ஏற்றி அப்பகுதியை சுற்றிக்காட்டினார். லெப்டினன்ட் ஜென்ரல் ஒருவர் இப்படி ஜீப் ஓட்டியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது வழக்கம் கிடையாது. லெப்டினன்ட் ஜென்ரல் எஸ் மோகன் மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். முதல்வர் ஸ்டாலினும் இவரிடம் நட்பாக பழகி, ராணுவ பயிற்சி மையம் குறித்து கேள்வி எழுப்பினார்.

நேரில் பார்வையிட்டார்
முதல்வர் ஸ்டாலின் நேற்று இங்கு பார்வையிட முக்கிய காரணம் உள்ளது. முதல்வர் ஒருவர் இந்த இடத்தை பார்வையிடுவது இதுவே கடந்த 50 வருடங்களில் இரண்டாவது முறையாகும். முன்னதாக முதல்வராக இருந்த போது கருணாநிதி இங்கு பார்வையிட்டார். அதன்பின் தற்போது முதல்வர் ஸ்டாலின் 50 வருடத்திற்கு பின் இங்கு பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications