மொத்த நினைப்பும் இங்கேதான்.. ரூ.1000 உரிமை தொகை திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சீரியஸாக இருப்பது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திவிட வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். இதற்கு பின் சில காரணங்கள் இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

Why is CM Stalin completely focusing only on1000 RS from the Kalaingar Housewives money Scheme?

இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு நாட்களாக வழங்கப்படுகின்றன. அதேபோல் இதற்கான டோக்கனும் இரண்டு நாட்களாக வழங்கப்படுகின்றன.

இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தில் பல்வேறு அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது. அதாவது பெயர், போன் எண், ஆதார் எண், படிப்பு, வருமானம் என்று பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இதனுடன் டோக்கன் ஒன்று வழங்கப்படுகிறது.இந்த டோக்கன் மிக முக்கியம் ஆகும். அதில் உங்களிடம் கொடுப்பதும் அப்ளிகேஷனில் நம்பர் இருக்கும். அதோடு சேர்ந்து ஒரு நம்பர் இருக்கும். இதுதான் டோக்கன் நம்பர் ஆகும். மேலும் டோக்கனில் உங்கள் பெயர் இருக்கும்.

பின்னர் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில், எந்த நேரம் செல்ல வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்றும் விவரங்கள் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட தேதியில் டோக்கனுடன் செல்ல வேண்டும்.உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும். அதோடு தேவையான ஆவணங்கள், ஆதார் இணைக்கப்பட்ட போன், ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

இன்று தொடக்கம்: இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறக்கூடிய முகாம்கள் இன்று தொடங்க உள்ளன. தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் முதல் முகாமை தொடங்கி வைக்கிறார். முதல்வர் கருணாநிதி சுயஉதவிக்குழு தொடங்கிய அதே தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் இந்த முகாமை தொடங்கி வைக்கிறார். கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி பின் வரும் விஷயங்கள் முறையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.

Why is CM Stalin completely focusing only on1000 RS from the Kalaingar Housewives money Scheme?

1. எக்காரணம் கொண்டும் தகுதி உள்ள பெண்களுக்கு நிதி கிடைக்காமல் போக கூடாது.
2. கண்டிப்பாக 1 கோடி என்ற இலக்கை அடைய வேண்டும்.
3. தகுதி பாட்டிலுக்குள் வராத பெண்களுக்கு முறையான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.
4. வங்கி கணக்குகளை வாங்குவதில் எந்த முறைகேடும், தவறும் நடக்க கூடாது.
5. அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட்ட பின் மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடி பதில் தர வேண்டும்.
6. அப்ளிகேஷனை நிரப்புவதில் மற்ற பணிகளிலும் பெண்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
7. பயனாளிகளை தேர்வு செய்வதில் எந்த இடங்களிலும் அரசியல் தலையீடு இருக்கவே கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறாராம்.

இந்த திட்டத்தின் கீழ் முறையாக பணம் கொடுத்து இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். அதோடு அடுத்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் இதை தேசிய வாக்குறுதியாக கொடுக்க வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு வழிகாட்டிய இருக்கவும் ஸ்டாலின் விரும்புகிறாராம். இந்த திட்டத்தின் கீழ் 21 வயதை தாண்டிய பெண்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் உங்கள் குடும்பம் கூட்டு குடும்பம். ஒரே ரேஷன் கார்டில் 2-3 பெண்கள் 21 வயதுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு திருமணமும் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+