கூட இருக்கும் கருப்பு ஆடுகள்.. எதிரிகள்.. விஜய்க்கு உண்மையான சோதனையே இதுதான்! ரொம்ப சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தற்போதைய சூழலில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருப்பது வெளியிலிருக்கும் அரசியல் எதிரிகளான திமுகவோ அல்லது பிற பெரிய கட்சிகளோ அல்ல.. மாறாக, அவரது சொந்தக் கட்சியின் உட்கட்டமைப்பும், சில நிர்வாகிகளின் செயல்பாடுகளும்தான் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் வலுத்து வருகிறது.

நிர்வாக இடர்பாடுகள்.. அழுத்தங்கள்.. கொள்கை ரீதியான மோதல்கள்.. எதிர்க்கட்சிகளின் கூர்மையான விமர்சனங்கள் என ஒரு புதிய கட்சி, ஆட்சி சந்திக்கும் வெளிப்புற எதிர்ப்புகள் அனைத்தும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் விஜய்க்கு வெளியில் இருந்து வருவதை விட உள்ளே இருந்துதான் அதிக பிரஷர் வருகிறதாம்!

CM Vijay

விஜய் அப்செட்!

கட்சி தொடங்கி, குறுகிய காலத்தில் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்த விஜய், உள்கட்சி நிர்வாகத்தில் சில முக்கியப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்.

கட்சிப் பொறுப்பிலும், மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கும் சில நிர்வாகிகளின் செயல்பாடு, அவர்கள் செயல்படும் விதம் மற்றும் அவர்களின் துறை சார்ந்த அறிவு போன்றவை எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருப்பது தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தடுமாற்றம், களப்பணியில் காட்டும் அலட்சியம், மற்றும் அரசியல் களத்தில் எவ்வாறு பேச வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் கூட சில நிர்வாகிகளிடம் இல்லை என்று கூறப்படுகிறது.

திரையில் தன்னை பார்த்து ரசித்த ரசிகர்கள், அரசியலில் களமிறங்கிய பின் ஒரு நிர்வாகியாகச் செயல்பட வேண்டும்.. என்ற விஜய்யின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்ய பலரால் முடியாமல் போயுள்ளது.

கட்டுப்படுத்துவது ஒரு பெரிய காரியம்!

ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தும்போது, தொண்டர்களையும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல. அதிலும் ஆட்சிக்கு வந்த பின் நிர்வாகிகள் செய்யும் தவறுகள் உற்று கவனிக்கப்படும். அப்படி விஜய் காதுக்கு சில நிர்வாகிகளின் தவறுகள் சென்றுள்ளது. இதை எல்லாம் கேட்டு கடுமையாக கொதித்து போய் இருக்கிறாராம் விஜய். முக்கியமாக சில கருப்பு ஆடுகள் பற்றி கேள்விப்பட்டு விஜய் கண்கள் சிவந்து போய் உள்ளதாம்.

சில தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், கட்சியின் பிம்பத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அமைவதைத் தடுக்க, அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதே விஜய்க்கு பெரும் போராட்டமாக மாறியுள்ளதாம்.

ஒவ்வொரு சிறு தவறையும் எதிர்க்கட்சிகள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், உள்கட்சிப் பூசல்களையும், நிர்வாகிகளின் அறியாமையையும் சரிசெய்வதற்கே விஜய்யின் பெரும்பாலான நேரம் செலவாகிறதாம்.

எதிரிகளை விட சொந்தக் கட்சியே பெரிய சவால்!

அரசியல் மேடைகளில் எதிர்க்கட்சியான திமுகவையோ அல்லது பிற மாற்றுக் கட்சிகளையோ கொள்கை ரீதியாகவும், பிரச்சார ரீதியாகவும் எதிர்கொள்வது விஜய்க்கு ஒரு பெரிய விஷயமல்ல. ஏனெனில், அது ஒரு நேரடிப் போர். அதற்குத் தேவையான திட்டங்களையும் , பிரச்சார அமைப்புகளையும் எளிதாக உருவாக்கிவிட முடியும்.

ஆனால், வீட்டிற்கு உள்ளே இருக்கும் பிரச்னையை சரிசெய்வது என்பது மிகவும் சிக்கலானது. தவெகவின் உண்மையான வெற்றி அல்லது பின்னடைவு என்பது, விஜய் தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளை எப்படிப் வழிநடத்துகிறார், அவர்களுக்கு அரசியல் தெளிவையும் பணி ஒழுக்கத்தையும் எப்படி கற்றுக்கொடுக்கிறார் என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+