Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடூர யார்க்கர்.. துல்லியமான இன் ஸ்விங்.. சிஎஸ்கே இறக்கிய 19 வயது புயல்.. தோனியின் மாஸ்டர்பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முகேஷ் சவுத்திரி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி உள்ள நிலையில் ஆகாஷ் சிங் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். 19 வயதே ஆகும் இந்த வீரர் சிஎஸ்கே அணிக்கு மிக முக்கியமான வீரராக திகழ போகிறார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஐபிஎல் டி 20 திருவிழா இன்று தொடங்குகிறது. சிஎஸ்கே குஜராத் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி மாலை கோலாகலமாக துவங்க உள்ளது.

கடந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற குஜராத் அணி 9வது இடம் பிடித்த சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி முதலில் சில போட்டிகளை ஜடேஜா கேப்டன்சியில் ஆடியது. மொத்த சீசனில் வெறும் 4 போட்டிகளை மட்டுமே சிஎஸ்கே வென்ற நிலையில் மோசமாக ஆடி வெளியேறியது. இந்த நிலையில்தான் இன்று நடக்கும் போட்டியை வெற்றியோடு தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

காயம்

காயம்

இந்த நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முறை தொடரில் இருந்தே முகேஷ் சவுத்திரி நீக்கப்பட்டு உள்ளார். முகேஷ் சவுத்திரி கடந்த சீசனிலும் சிறப்பாக பவுலிங் செய்தார். சாகர் இல்லாத குறையை தீர்த்து இறுதிக்கட்டங்களில் நன்றாக பவுலிங் செய்தார். அவர் இல்லாத காரணத்தால் சிஎஸ்கே அணிக்கு லெப்ட் ஆரம் சீம் பவுலர் இல்லாத நிலை ஏற்பட்டது. அவருக்கு மாற்றாக தற்போது 19 வயதே நிரம்பிய ஆகாஷ் சிங்கை சிஎஸ்கே அணி மாற்று வீரராக எடுத்து உள்ளது. சிஎஸ்கே வலை பயிற்சியில் பவுலிங் செய்து வந்தவர் 15 பேர் கொண்ட அணியில் சேர்ந்துள்ளார்.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

இவர் இடதுகை சீம் பவுலர். முக்கியமாக இன் ஸ்விங் போட கூடியவர் . 140 கிலோ மீட்டருக்கும் வேகமாக அவ்வப்போது போடுவார். அதற்கெல்லாம் மேலே இவர் கடைசி ஓவர்களில் துல்லியமாக யார்க்கர் வீச கூடியவர். ராஜஸ்தான் மாநில அணிக்காகவும், நாகலாந்து மாநில அணிக்காகவும் இவர் சிறப்பாக ஆடி இருக்கிறார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் ஆடி உள்ளார். அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக 2020ல் ஆடி கவனம் பெற்றார்.

தோனி

தோனி

இவரின் பலமே டெத் ஓவர்களில் யார்க்கர் வீசுவது. அதேபோல் இன் ஸ்விங் செய்வது. 9 முதல் தர போட்டிகளில் இவர் 31 விக்கெட் எடுத்துள்ளார். அதாவது மேட்ச்சிற்கு 3 விக்கெட் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணி இவரை தற்போது 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்து உள்ளது. சிஎஸ்கே அணிக்கு தற்போது லெப்ட் ஆர்ம் சீம் பவுலர் இல்லை. அந்த குறையை இவர் போக்குவார். முக்கியமாக இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்வார், யார்க்கர் போடுவார் என்பதால் தோனி கண்டிப்பாக இவரை இறக்குவார்.

பவுலிங்

பவுலிங்

ஆனால் இவரை மொத்தமாக அணியில் எடுக்காமல் பவுலிங் போடும் போது மட்டும் இம்பாக்ட் வீரராக தோனி களமிறக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த விதிப்படி ஆட்டத்தின் ஒரு பகுதியில் வீரரை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக முதல் இன்னிங்சில் ஒரு அணி பேட்டிங் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்யும் போது ஒரு பேட்ஸ்மேனை தூக்கிவிட்டு கூடுதலாக ஒரு பவுலரை கொண்டு வர முடியும். உதாரணமாக சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ருத்துராஜ் நன்றாக ஆடி 100 அடிக்கிறார்.

 சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

அவர் சிறப்பாக ஆடினாலும் கூட பவுலிங் செய்ய மாட்டார். இரண்டாவது இன்னிங்சில் அவர் பவுலிங் செய்யாமல் பீல்டிங் மட்டும் செய்வதில் பலன் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதில் கூடுதல் ஒரு முழுநேர பவுலர் களமிறக்கப்பட்டார் என்றால் எப்படி இருக்கும். இந்த வசதியைத்தான் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வந்துள்ளது. இந்த விதியை பயன்படுத்தி ஒரு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு பவுலிங் செய்ய ஆகாஷ் சிங்கை சிஎஸ்கே அணி களமிறக்க வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+